நடிகைகளுக்கு தோற்றம் மிக முக்கியம். அறிமுகமாகும்போது இருக்கும் தோற்றத்தை அப்படியே பராமரிப்பவர்கள்தான் சினிமாவில் நீடிக்க முடியும், ஸ்ரீதேவி போன்ற நடிகைகள் அதில் கவனம் செலுத்தியதால்தான் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடிந்தது.
அறிமுகமாகி இரண்டு படங்களிலேயே விஜய் பட ஹீரோயின் ஆகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். கோலிவுட்டின் முக்கிய ஹீரோயின் ஆகிவிட்ட கீர்த்தி சுரேஷ் அதற்குள்ளாகவே உடல் எடை ஏறிப்போய் தொப்பை போட்டுவிட்டாராம். விஜய்யுடன் நடித்துக்கொண்டிருக்கும் பைரவா பட ஷூட்டிங்கில் இது தெரிந்து சிலர் கிண்டல் செய்துவிட்டார்கள்.
கேரியர் ஆரம்பத்தில் ஜிம்முக்கு ரெகுலராக சென்றுகொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் பிஸியான பிறகு அதனை நிறுத்தியிருக்கிறார். இப்போது அதனை மீண்டும் தொடர சொல்லிவிட்டாராம் அம்மா மேனகா. சாப்பாடு விஷயத்திலும் நிறைய கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்.
உடம்பை மெயின்டெய்ன் பண்ணுவதில்தான் இருக்கிறது கீர்த்தியின் கேரியர்!
Tags:
Cinema
,
உடல் எடை
,
கீர்த்தி சுரேஷ்
,
சினிமா
,
மேனகா
,
விஜய்
,
ஜிம்
,
ஸ்ரீதேவி