தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவத் ரங்கூன் படப்பிடிப்பின்போது பாறைக்கு பின்னால் மறைந்து நின்று உடை மாற்றியதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஷாஹித் கபூர், சைப் அலி கானுடன் சேர்ந்து ரங்கூன் இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சிம்ரன் என்ற இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் ரங்கூன் படத்தில் நடித்தது பற்றி கூறுகையில்,
ரங்கூன் படப்பிடிப்பு அருணாச்சல பிரேதச மாநிலத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் நடைபெற்றது. அங்கு கிராமங்களோ எதுவுமே இல்லை. ஏன் கழிப்பறைகள் கூட இல்லை.
அந்த பள்ளத்தாக்கில் வேறு வழியில்லாமல் நான் பாறைகளுக்கு பின்னால் சிறுநீர் கழித்தேன், உடை மாற்றினேன். என் குழுவினர் என்னை மறைத்து நின்றனர்.
நான் மட்டும் அல்ல ஷாஹித் கபூரும் பாறைக்கு பின்னால் தான் இயற்கை உபாதை கழித்தார், உடை மாற்றினார். எங்களுக்கு வேறு வழியில்லை. என்று கண்றாவியாக பேசிய அவர். தொடர்ந்து, நாங்கள் கஷ்டப்பட்டாலும் படம் நன்றாக வந்துள்ளது.
குயீன் படத்தில் நடித்தபோது ஐரோப்பாவில் உள்ள காபி கடைகளில் உடை மாற்றினேன். நான் அந்த படத்திற்காக பட்ட கஷ்டம் வீண் போகவில்லை. ரங்கூன் படத்திற்காக பட்டுள்ள கஷ்டமும் வீண் போகாது என நம்புகிறேன்.
Tags:
Cinema
,
கங்கனா
,
கன்றாவி பேச்சு
,
சிறுநீர்
,
சினிமா
,
தேசிய விருது
,
ரங்கூன்