‘பொய் சொல்லப்போறோம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். தொடர்ந்து ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது அரை நிர்வாண படத்தை அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே ஸ்ரேயா, ராய்லட்சுமி, எமிஜாக்சன் இதுபோல் அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தனது அரை நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த பட்டியலில் இப்போது பியா பாஜ்பாயும் சேர்ந்திருக்கிறார்.
மாடல் அழகியாக இருந்த இவர் விளம்பர படங்களில் நடித்தார். பின்னர் நடிகை ஆனார். சினிமாவில் மார்க்கெட் பிடிப்பதற்காகத்தான் இதுபோன்ற படங்களை நடிகைகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Tags:
Cinema
,
அரை நிர்வாணம்
,
எமிஜாக்சன்
,
சினிமா
,
பியா
,
ராய்லட்சுமி
,
ஸ்ரேயா