‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. தற்போது படங்களை இயக்குவதை விட்டுவிட்டு முழுநேர நடிகராக உருமாறியுள்ளார். நிறைய படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
தம்பி ராமையாவின் தாயார் பாப்பம்மாள், வயது 74. மதுரையில் வசித்துவந்த பாப்பம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவரது உயிர் பிரிந்தது.
மறைந்த பாப்பம்மாளின் இறுதிச்சடங்கு தம்பி ராமையாவின் சொந்த ஊரான புதுக்கோட்டையில் உள்ள ராஜராஜபுரத்தில் நடைபெறுகிறது.
தம்பி ராமையாவின் தாயார் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
தம்பி ராமையா நடிப்பில் தற்போது ‘இருமுகன்’ படம் தயாராக இருக்கிறது. மேலும் பல படங்களிலும் நடித்து வருகிறார்.
Tags:
Cinema
,
Thambi Ramaiah
,
Thambi Ramaiah Death
,
தம்பி ராமையா
,
மரணம்