நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வியும், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாரியாவும் காதலித்து வருவதாக சில மாதங்களாகவே மீடியாக்களில் செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தன்னைத்தேடி வந்த நடிப்பு வாய்ப்புகளை தவிர்த்து விட்டு, அமெரிக்கா சென்று நடிப்பு சம்பந்தமான படிப்பை தொடர்ந்து வருகிறார் ஜான்வி. அந்த வகையில், மகளுக்கு நடிப்பு பற்றிய பயிற்சியை கொடுத்த பிறகு களத்தில் இறக்கிவிட திட்டமிட்டிருக்கிறார் ஸ்ரீதேவி.
இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து மும்பை வரும்போதெல்லாம் தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் ஜாலியாக சுற்றித்திரியும் ஜான்வி, சமீபத்தில் ஒரு பார்ட்டியில் அவருடன் கலந்து கொண்டாராம். அப்போது காதலருடன் இணைந்து நடனமாடிய ஜான்வி,
ஒருகட்டத்தில் அவருடன் லிப் டூ லிப் முத்தம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
புகைப்படங்கள்
,
முத்தம்
,
லிப் லாக்
,
ஜான்வி
,
ஸ்ரீதேவி