விஜய்-அமலா பால் பிரிவிற்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
நம்பிக்கை, நேர்மை ஆகிய இரண்டும் உடைந்தததே விவாகரத்திற்கு காரணம் என விஜய் சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில், விஜய்யிடமிருந்து எந்த ஜீவனாம்சமும் வேண்டாம் என அமலா பால் முடிவெடுத்துள்ளாராம். அதற்கான காரணம் அவருக்கே வெளிச்சம்.
பெரும்பாலும் இதுபோன்ற பிரபலங்களின் விவகாரத்தில் பெரிய தொகை ஜீவனாம்சமாக கொடுக்கப்படும். சமீபத்தில் ஹிந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் தன் மனைவியை விவாகரத்து செய்தபோது, 400 கோடி ருபாய் அளவிற்கு ஜீவனாம்சம் கொடுத்ததாக கூறப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
Tags:
Cinema
,
அமலா பால்
,
சினிமா
,
நம்பிக்கை
,
நேர்மை
,
விஜய்
,
ஜீவனாம்சம்