பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
1963ல் பெரிய இடத்துப் பெண் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. 1970-களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய கம்யூட்டர் காலம் வரை சினிமா, சின்னத்திரை என அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நடனத்திற்காகவே படங்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன. இன்றைக்கும் அதே அழகோடு சீரியல்களில் நடித்து வந்தார். ரத்த புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தும் அதைப் பற்றியே சுவடே எதுவும் இன்றி சீரியல்களில் நடித்து வந்தார். வள்ளி சீரியல்களில் அவர் அணியும் புடவைகளுக்கு இல்லத்தரசிகள் ரசிகைகளாக மாறியுள்ளனர்.
ஒவ்வொரு எபிசோடிலும் ஜோதிலட்சுமியை பார்க்கவே வள்ளி சீரியல் பார்த்தவர்கள் உள்ளனர். சென்னை தி.நகரில் வசித்து வந்த ஜோதிலட்சுமி, ரத்த புற்றுநோயின் தீவிரம் அதிகரிக்கவே, நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரபல திரை நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜோதிலட்சுமியின் இறுதிச்சடங்கு, சென்னை, கண்ணம்மாபேட்டையில் இன்று மாலை நடைபெறுகிறது.
Tags:
Cinema
,
கவர்ச்சி நடிகை
,
சினிமா
,
புற்று நோய்
,
வள்ளி
,
ஜோதிலட்சுமி