ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ரன்பிர் கபூருடன் ஐஸ்வர்யா ராய் மிகவும் நெருக்கமான காட்சியில் நடித்துள்ளது பச்சன்களை கோபம் அடைய வைத்துள்ளதாம். பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் தயாரித்து இயக்கி வரும் படம் ஏ தில் ஹை முஷ்கில். இதில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
ஐஸ், ரன்பிர்
படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பிரும் லிப் டூ லிப் முத்தம் கொடுக்க வேண்டும், நெருக்கமாக ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார். முத்தக் காட்சிக்கு ஐஸ் தடா போட பட்டும் படாமலும் அந்த காட்சியை கரண் படமாக்கியுள்ளார்.
நெருக்கம்
ஒரு காட்சியில் ஐஸ்வர்யாவின் உடலில் இருக்கும் சாக்லேட்டை ரன்பிரும், அவர் உடலில் இருக்கும் சாக்லேட்டை ஐஸும் நாவால் எடுக்க வேண்டும். அந்த காட்சியில் இருவரும் நடித்துக் கொடுத்துள்ளனர்.
பச்சன்கள்
ஐஸ்வர்யா ராய் ரன்பிருடன் நெருக்கமாக நடித்துள்ளது பற்றி அறிந்து பச்சன்கள் அதாவது அவரது கணவர் வீட்டார் கோபத்தில் உள்ளார்களாம். மேலும் கரணை அழைத்து ஒழுங்கா அந்த காட்சியை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்யவும் என தெரிவித்துள்ளார்கள் என்று முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பச்சன்களா?
பச்சன் குடும்பத்தார் பட விவகாரங்களில் தலையிட மாட்டார்கள் என்றும், அதுவும் ஐஸ்வர்யாவின் வேலை விஷயத்தில் நிச்சயம் தலையிட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
அனுஷ்கா சர்மா
,
ஐஸ்வர்யா ராய்
,
கசமுசா காட்சி
,
சினிமா
,
ரன்பிர்