விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வெளியான தெறி திரைப்படம் உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
விமர்சகர்கள் மத்தியிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் முதல் ஆறு நாட்களில் இப்படம் ரூ. 102.4 கோடி வசூல் செய்திருப்பதாக சில இந்திய ஊடகங்களில் தற்போது தகவல் வெளிவந்துள்ளன.
எனினும் இது தயாரிப்பு தரப்பு சார்பில் வெளியான அதிகாரப்பூர்வ வசூல் விவரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் , தெறி திரைப்படம் செங்கல்பட்டில் வௌியாகாதது தொடர்பிலும் தெறி திரைப்படத்தின் உலகலாவிய வசூல் தொடர்பிலும் தயாரிப்பாளர் தாணு நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது தெறி படம் திரையிடப்படாத பகுதிகளில் உள்ள விஜய் ரசிகர்களிடம் தாணு மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
குறித்த ஊடக சந்திப்பின் போதான காணொளி...!!
To Spoil Vijay's Reputation They Had Not Released Theri