கிரிக்கெட் கிரவுண்டிலும் பழைய பகை! வெறுப்பு காட்டிய விக்ரம்..!!

2:44 AM |
புத்தன் ஏசு காந்தி மூன்று பேர் இமேஜையும் மிக்சியில் போட்டு நொறுங்க ஓட்டினால், மேலோட்டமாக ஒரு நுரை மிதக்குமே… அதுதான் விக்ரமின் இமேஜ். அந்த நுரையை மேலோட்டாமாகவே வழித்துப் போட்டுவிட்டு உள்ளே இறங்கினால், குடிச்ச வாயும் கருப்பு. கொண்ட வயிறும் கருப்பு என்பதாகதான் இருக்கும் அதன் ரிசல்ட்

நேற்று நடைபெற்ற நட்சத்திரக் கிரிக்கெட் போட்டியில் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. சூர்யாவின் கெட்ட நேரம்… அங்குதான் கமல்ஹாசனும் விக்ரமும் இருந்தார்கள். சூர்யா மாதிரி பெரிய ஹீரோக்களுக்கு, சுமார் ஹீரோக்களை வைத்து ஷீல்டு கொடுக்க முடியாதல்லவா? அதனால் அருகிலிருந்த பெரிய ஹீரோவான கமலையும் சற்றே அவரைவிட சுமார் பெரிய ஹீரோவான விக்ரமையும் அழைத்துவிட்டார் அந்த அப்பாவி தொகுப்பாளினி.

ஐயோ பாவம் அவருக்கு எப்படி தெரியும் சூர்யாவும் விக்ரமும் கடந்த பல வருஷங்களாக உறக்கத்தில் கூட ஒருவர் பாக்கெட்டில் இன்னொருவர் கல்லை பொறுக்கி போடுகிற விஷயம்? இந்த பகை எதனால் வந்தது? யாரால் வந்தது? என்பதெல்லாம் இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று என்பதால் ஒரு பலத்த ஸ்கிப்!

விக்ரம் பெயரை சொன்னதும் சூர்யா முகத்தில் ஒரு இறுக்கம் ஓடி மறைவதற்குள், அந்த இடத்திலிருந்து சற்றே நகர்ந்து கொண்டார் விக்ரம். அறிஞ்ச தெரிஞ்ச பகைதான் என்பதால், சட்டென புரிந்து கொண்ட கமல், விக்ரம் கையை பிடித்து இழுத்து கவனச் சிதறலுக்கு ஆளாக்காமல் தானே சிங்கிளாக முன் வந்து ஷீல்டை கொடுத்தார். அப்பாடா… இருவர் முகத்திலும் நிம்மதி!

என்னைக்கோ குத்துன முள்ளு, இன்னைக்கு கத்தியா வந்து திரும்பிக் குத்துனா ஐயோ பாவம்… என்னதான் செய்யும் இதயம்ஸ்…?
மேலும் வாசிக்க…

கமலின் கடைசி மகள் எங்கெல்லாம் எப்படியெல்லாம் பச்சை குத்திருக்கு பாருங்களேன் ! வீடியோ

11:05 PM |
மேலும் வாசிக்க…

கமல் சார்னா பயம்... ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிடி

10:31 PM |
மேலும் வாசிக்க…

விஜய் மற்றும் கமல் எவ்வளவு நாகரிகம் தெரியாதவர்கள் என்று இந்த வீடியோவை பார்த்தால் புரியும்

9:47 PM |
மேலும் வாசிக்க…

'விஸ்வரூபம்' திரைப்படம் உருவான விதம் - பாகம் 2

2:08 AM |
மேலும் வாசிக்க…

கமல் வெளியிட்ட “விஸ்வரூபம்” பட புதிய வீடியோ..!!

1:05 AM |
மேலும் வாசிக்க…

சுருதியின் ஆபாசம் கமல் என்ன சொல்கிறார் பாருங்க.. (வீடியோ)

2:08 AM |
படத்தில் ஆபாச உடைக்கு அடுக்கடுக்காக பஞ் வசனம் பேசிய கமல் நிஐ வாழ்க்கையில் இது பற்றி பேசுவதில்லை... நடிகர்கள் வெறும் நடிப்புக்காகவே அநியாயத்தை தட்டிக்கேட்கிறார்கள் என்பதை புரிந்துகொண்ட ஒருவர் அவர் பேசிய வசனங்களை வைத்து சுருதிஹாசனை சொல்வது போல் செய்துள்ளார்கள்... இதில் தப்பு எதுவும் இல்லையே கமல் சார்..???



மேலும் வாசிக்க…

சகலகலாவல்லி ஸ்ருதி ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!

1:01 AM |
‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் மூத்த மகளும் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையுமான ஸ்ருதி ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். தந்தையைப் போலவே நடிப்பு, இசை, பாடல், நடனம், பாடல் இயக்கம் என இவரும் பன்முகம் கொண்டு விளங்குபவர்.

ஏ.ஆர். முருகதாஸ் மூலமாக தமிழில் ஏழாம் அறிவில் அறிமுகமாகிய இவர், குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.தற்போது தமிழில் S3, ஹிந்தியில் ராக்கி ஹாண்ட்சம், யாரா என இவர் பறந்து பறந்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும் வாசிக்க…

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கிடைத்த பெரிய கௌரவம்..!!

9:31 PM |
தமிழ் சினிமாவில் நிறைய புது விஷயங்களை ஆராய்ந்து அதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உடையவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

இவர் Harvard Business School and Harvard Kennedy School என்ற இடத்தில் நடக்க இருக்கும் India Conference 2016 என்ற மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். அந்த மாநாட்டில் அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு India in Transition - Opportunities and Challenges. உலகநாயகனுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம் மட்டுமில்லாது,

அந்த பெரிய மாநாட்டில் தென்னிந்திய சினிமாவில் பங்குபெறும் முதல் நடிகரும் இவரே ஆவார்.அதேபோல் சசி தரூர், சந்தா கோச்சர், நிரூபாமா ராவ், பிரீத்தா ரெட்டி போன்றவர்களும் அம்மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
மேலும் வாசிக்க…

சென்னையில் தான் என் உயிர் போக வேண்டும் சரோஜா தேவி உருக்கம்..!!

12:13 AM |
சென்னையில், நேற்று, 78வது பிறந்த நாளை கொண்டாடிய, பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, என் உயிர், சென்னையில் தான் போக வேண்டும், என, கூறினார். நடிகை சரோஜா தேவி, தன் பிறந்த நாளை ஒட்டி, தமிழக வெள்ள நிவாரண நிதிக்காக, 5 லட்ச ரூபாயை, நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அளித்தார். பின், அவர் அளித்த பேட்டி

இப்போதெல்லாம் அதிக படங்களில் நடிப்பதில்லையே ஏன்?

என் பிள்ளைகள் சம்மதித்தால் மட்டுமே நடிப்பேன். நிஜத்தில் நான் எப்படி இருக்கிறேனோ, திரையிலும் அப்படியே காட்ட வேண்டும். நிறைய பேர் நடிக்க கூப்பிடுகின்றனர்; சும்மா வந்து போகும் கதாபாத்திரத்தில் நடிக்க மனம் இல்லை.

முன்னாள் மற்றும் இந்நாள் நடிகர்களை பற்றி?

எம்ஜிஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றோர், நடிப்பில் ஜாம்பவான்கள். சிவாஜியின், ஒரு நடையிலேயே, பத்து நடைகள் பேசும். திருடாதே, அன்பே வா, எங்க வீட்டுப் பிள்ளை போன்ற பல படங்கள், பொன் விழாவை கொண்டாடின; அவர்களுடன் நடித்த படங்கள் காலத்தால் அழியாதவை. இப்போதுள்ள நடிகர்களுக்கு, நடிக்கவும் இயக்குனர்கள் வாய்ப்பு தர வேண்டும். வெறும் சண்டை, பாட்டு  மட்டுமே இருந்தால் எப்படி? சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் படங்களின், சிடியை போட்டு பார்த்து இப்போதுள்ள நடிகர்கள், நடிக்க கற்க வேண்டும்.

இப்போதுள்ள நடிகைகளுக்கு தாங்கள் கூறும் அறிவுரை?

நான் நடித்த போது, புடவையிலேயே, கிளாமரை காட்டியிருப்போம். நடிகைகள் எப்போதும் சுய கவுரவத்தை காக்க வேண்டும். பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும். எங்களை போன்றவர்களை, பழம்பெரும் நடிகைகள் என கூறுவதை தவிர்க்க வேண்டும். எப்போதும் நாங்கள் நடிகர்கள் தான்.

நடிகர் கமல் உங்களிடம் முத்தம் கேட்டாரா.?

பார்த்தால் பசி தீரும் படத்தில் நடித்த போது, கமல் மிகவும் சிறுபிள்ளை. சுட்டியாக இருந்த அவனை நான் உட்பட அனைவரும் முத்தமிட்டு அரவணைப்போம். ஆனால், இப்போது கமல், நடிகைகளுக்கு மட்டுமே முத்தம் தருகிறார். ஒரு முறை நான் அவரிடம், ஏம்பா... நாங்கள் முத்தம் தரலாமா என்றேன்; அவரும், தாராளமாக... நீங்கள் என் அம்மா மாதிரி... எவ்வளவு முத்தம் வேண்டுமானாலும் தரலாம் என்றார்.

அரசியலுக்கு வந்து இருக்கலாமே?

முன்னாள் பிரதமர் ராஜிவ், என்னை அரசியலுக்கு வருமாறு அழைத்தார்; மைசூரில் போட்டியிட வாய்ப்பு அளித்தார். அரசியலில் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத சூழல் ஏற்பட்டு விடும் என்பதால், எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறேன் ஆனால், அரசியல் பதவி மட்டும் வேண்டாம் என, மறுத்து விட்டேன்.

எம்.ஜி.ஆரோடு நடித்த போது சுவாரசியமான அனுபவம் ஏதாவது உண்டா?

நான் ஆணையிட்டால் படப்பிடிப்பு சனிக்கிழமை, இரவு நேரத்தில்  நடந்தது. அப்போது, எம்.ஜி.ஆர்., வீட்டிலிருந்து வந்த பிரியாணியை சாப்பிட கொடுத்தார். நான், ஆஞ்சநேய பக்தை என கூறி, பிரியாணியை சாப்பிட மறுத்தேன். அவர், இந்த வயதில் இவ்வளவு பக்தியா என, மற்றவர்களிடம் ஆச்சரியத்தோடு கூறினார். ஆனாலும், எம்.ஜி.ஆர்., என்னை விடவில்லை. நள்ளிரவு, 12:00 மணியை கடந்த போது, என்னிடம் வந்து, மீண்டும் பிரியாணியை கொடுத்து, ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டது; பிரியாணி சாப்பிடலாம் என்றார். ஆனால் நான், சூரியன் வந்தால் தான் மறு நாள் என கூறி, மறுத்து விட்டேன்.

படங்களை இயக்கும் ஆசை உள்ளதா?

சிவாஜி, ஒரு படத்தையாவது இயக்கி இருக்கிறாரா? படத்தை இயக்குவதை விட, கடைசி வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் ஆசை.

தமிழ் ரசிகர்கள் பற்றி?

எனக்கு மட்டும் பெங்களூருவில் திருமணம் ஆகவில்லை என்றால், சென்னையில் தான் இருந்திருப்பேன். எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜி மறைந்த சென்னையில் தான், என் உயிரும் போக வேண்டும். என்னை நேசித்த தமிழ் ரசிகர்கள் இங்கு அதிகம்.இவ்வாறு நடிகை சரோஜா தேவி கூறினார்.
மேலும் வாசிக்க…

தூங்காவனம் படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன? இதுவரை வெளிவராத காணொளி

11:55 PM |
மேலும் வாசிக்க…

குஷ்பு கமலுடன் செய்த லீலை - அட்டாகாச வீடியோ

9:17 PM |



குஷ்பு கமலுடன் செய்த லீலை - அட்டாகாச வீடியோ Simply Kushboo | Kamal Hassan | Promo


மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com