தெறி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
மேலும் அரங்கினுள் நுழைந்த சில ரசிகர்களையும் அடியாட்கள் சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்து அடித்து துரத்தும் காட்சிகள் தற்போது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ரசிகர்கள், சினிமா என்பது ரசிகர்களுக்காக தான். ரசிகர்களுக்கே விழாவில் கலந்துகொள்ள அனுமதி இல்லை. தீவிர விஜய் ரசிகன் நான், அவரை நேரில் காண வந்து இவ்வளவு அசிகங்களை சந்தித்துள்ளோம்.
இதேபோல் எங்களை தெறி திரைப்படம் வெளியாகும் நாள் அன்று செய்வார்களா? நாங்கள் தெறி படத்தை புறக்கணிக்க உள்ளோம், இதற்கு விஜய் உரிய பதில் சொல்லியாக வேண்டும் என்று கோபத்துடன் பேசியுள்ளார்.விஜய் ரசிகர்களே விஜய் படத்தை புறக்கணிக்க இருப்பதாக கூறியது கோலிவுட்டை அதிர்ச்சியாக்கியுள்ளது.
Tags:
Cinema
,
கோலிவுட்
,
சினிமா
,
தெறி
,
ரசிகர்கள்
,
விஜய்
,
விஜய் ரசிகர்கள்