தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்து விட்டது. இதில் விஜய், ரசிகர்களுக்கு ஒரு சில குட்டிக்கதைகளை கூறினார்.
அப்படி கூறுகையில் சீன தலைவர் மாவோவை ரஷ்யா தலைவர் என குறிப்பிட்டார். இதனால், சமூக வலைத்தளங்களில் இதை கிண்டல் செய்து கருத்துக்களை சிலர் தெரிவித்தனர்.
இச்செய்தி உடனே விஜய் காதுக்கு செல்ல, ‘ஒரு பெரிய மேடையில் நம் கருத்துக்களை தெரிவிக்கையில், இந்த மாதிரியான தவறுகள் நடந்து விடுகின்றது, இதற்காக நான் வருந்துகிறேன், மற்றப்படி நான் சொன்ன கருத்துக்கள் ரசிகர்களை சென்றடையும் என நம்புகிறேன்’ என கூறியுள்ளார்.
மேலும், தெறி இசைவெளியீட்டின் போது ரசிகர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இன்னும் விஜய் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
தெறி இசை வெளியீட்டு விழா
,
ரசிகர்கள்
,
ரஷ்யா தலைவர்
,
விஜய்