சென்ற தேர்தலின் போது தீவிர அரசியல் பிரசாரத்தில் இறங்கிய காமெடி நடிகர் வடிவேலு, அவர் ஆதரவளித்த கட்சி தோற்றுப்போனதால் சினிமா துறையில் இருந்தும் ஒதுங்க வேண்டியாதாயிற்று.
அதற்கு பின் அவர் ரீஎன்ட்ரி கொடுத்து நடித்த படங்களும் சரியாக போகவில்லை.
மீண்டும், இந்த வருடம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்ய பல தமிழ் நடிகர்கள் தயாராகிவருகின்றனர்.
நடிகர் கஞ்சா கருப்பு, “ஆளும் கட்சி அழைத்தால் பிரசாரம் செய்ய தயார்’ என அறிவித்துள்ளார். மேலும் வடிவேலுவை ‘இந்த தேர்தலுக்கு பிரசாரம் செய்ய வீட்டை விட்டு வெளிய வந்துவிடவேண்டாம்’ எனவும் எச்சரித்துள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
வடிவேலு