ஷங்கரின் நண்பன் படத்தில் விஜய் நடித்து வந்தபோது அந்த படத்தில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றியவர் அட்லி. அப்போதே விஜய்யிடம் நெருக்கமாக பழகியவர், தன்னிடமிருந்த ஒரு கதையையும் சொல்லி வைத்திருக்கிறார். அதை மனதில் போட்டு வைத்திருந்த விஜய், கத்தியில் நடிக்கும்போதே அட்லிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார். அதனால், ராஜாராணிக்குப் பிறகு அடுத்த படவேலைகளில் இறங்காமல் விஜய்க்காக இரண்டு வருடம் காத்திருந்து இப்போது தெறி படத்தை இயக்கியிருக்கிறார் அட்லி.
இந்நிலையில் தெறியில் விஜய் நடித்திருப்பது பற்றி அட்லி கூறுகையில், தெறி பக்கா மாஸ் ஹீரோவுக்கான படம். விஜய் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்தமான படமாக இருக்கும். மேலும், இந்த படத்தைப் பொறுத்தவரை எவ்வளவு ரிஸ்க்கான காட்சிகளாக இருந்தாலும் நோ சொல்லாமல் நடித்துக்கொடுத்தார் விஜய்.
நான் என்ன சொன்னாலும் அதற்கு மறுப்பு சொல்லாமல், கேட்டபடி நடித்துக் கொடுத்தார். குறிப்பாக, நாளை இந்த மாதிரி ஒரு காட்சி எடுக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது, அதை மனதில் வாங்கிக்கொண்டு செல்லும் விஜய், மறுநாள் வரும்போது அதற்கு தன்னை முழுமையாக தயார்படுத்திக்கொண்டு வந்து நடித்தார். சில காட்சிகளில் உயரத்தில் இருந்து குதிக்க வேண்டும் என்றால்கூட டூப் பயன்படுத்தாமல் தானே முன்வந்து நடித்தார். அது எனக்கு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது என்கிறார் அட்லி.
Tags:
Cinema
,
அட்லி
,
கத்தி
,
சினிமா
,
தெறி
,
ராஜாராணி
,
விஜய்