‘ஐ’ படத்தைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் விஜய் மற்றும் விக்ரம் இணைந்து நடிக்கும் ஒர் அதிரடி படம் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
‘ஐ’ படம் வெளியானவுடன், தனது அடுத்த படத்துக்கான முதற்கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வந்தார் இயக்குநர் ஷங்கர். இரண்டு நாயகர்களைக் கொண்டு ஒரு பிரம்மாண்டமான ஆக்ஷன் கதையை எழுதிவந்தார்.
‘நண்பன்’ படப்பிடிப்பின் போது, ஷங்கர் இயக்கத்தில் ஒரு நேரடி தமிழ் படம் பண்ண விரும்புவதாக விஜய் தெரிவித்திருந்தால் அவரை சந்தித்திருக்கிறார் ஷங்கர். “எப்போது படப்பிடிப்பு.. தேதிகள் மட்டும் சொல்லுங்கள்” என்று விஜய் சந்தோஷத்துடன் கேட்டிருக்கிறார். அப்போது அடுத்த ஆண்டு கொஞ்சம் தேதிகள் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார் ஷங்கர். இன்னொரு பாத்திரத்துக்கு விக்ரமிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
முழுவீச்சில் படத்தின் முதற்கட்ட பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் போது தான் ஷங்கருக்கு “நாம ஒரு படம் பண்ணலாமா” என்று ரஜினியிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து எழுதி வந்த இரண்டு நாயகர்கள் கதையை அப்படியே ஓரம் வைத்துவிட்டு, ஷங்கர் தொடங்கிய படம் தான் ‘2.0’
இப்போதும் இரண்டு நாயகர்களுக்காக ஷங்கர் எழுதிய கதை அவரிடம் முழுமையாக இருக்கிறது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து அக்கதையை விஜய் – விக்ரம் இருவரையும் வைத்து இயக்கும் எண்ணமும் இருக்கிறது.
Tags:
Cinema
,
ஐ
,
சினிமா
,
ரஜினி
,
விக்ரம்
,
விஜய்
,
ஷங்கர்