காஜல் அகர்வால் கவனம் மீண்டும் இந்தி படங்கள் மீது திரும்பி இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் கிடைத்த வெற்றி பாலிவுட்டில் அவருக்கு கிடைக்கவில்லை.
சிங்கம், ஸ்பெஷல் 26 என 2 இந்தி படங்களில் நடித்தபோதும் புதிய வாய்ப்புகள் குவியவில்லை. கவர்ச்சிதான் இந்தி மார்க்கெட்டுக்கு கைகொடுக்கும் என்று எண்ணியவர் சமீபத்தில் மும்பையில் நடந்த பட விழாவுக்கு கவர்ச்சி பளிச்சிட வந்து பார்வையாளர்களை அசத்தினார்.
பாலிவுட்டில் குத்தாட்டம் ஆடும் நாயகிகள் தினம் தினம் இதுபோல் போஸ் தருவதால் காஜலின் கவர்ச்சியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அடுத்த ஆயுதமாக லிப் டு லிப் கிஸ் கையிலெடுத்திருக்கிறார். ரன்தீப் ஹுடாவுடன் காஜல் நடிக்கும் புதிய இந்தி படம் ‘டு லஃப்ஸோன் கி கஹானி’. இதில் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.
கவர்ச்சியை மூடி வைத்து இந்தியில் நடித்து வந்த காஜல் இப்படம் மூலம் விதிமுறைகளை தளர்த்தி இருக்கிறார். ரன்தீப்புடன் அவர் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்து பாலிவுட் இயக்குனர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
Tags:
Cinema
,
Kajal Agarwal
,
காஜல்
,
சினிமா
,
ரன்தீப்