லிங்கா படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் கபாலி படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட 95% முடிவடைந்துள்ளது. கலைபுலி எஸ்.தாணு தயாரிப்பில் அட்டகத்தில் பா.ரஞ்சித் இயக்கி வரும் இப்படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கிசோர் குமார், கலையரசன், அட்டகத்தி தினேஷ், தன்சிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் டீசர் எப்போது வரும் என ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தின் டீசர் இம்மாதம் 25ம் தேதி வரும் என கூறப்படுகின்றது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்புக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Tags:
Cinema
,
கபாலி
,
கபாலி டீசர்
,
சினிமா
,
தன்சிகா
,
ரஜினிகாந்த்