குழந்தைகளுக்கு விருப்பமான நாயகன் என்ற பெருமை பெற்றிருந்த நடிகர் விஜயே, சிவகார்த்திகேயன் குழந்தைகளுக்கு பிடித்த நடிகராக இடம் பிடித்துவிட்டார் என சிவாவை பாராட்டினார். வெற்றி நிலையானது அல்ல, எனவே வெற்றி நாயகனாக யார் வேண்டுமானாலும் மாறலாம்.
ஆனால், மக்கள் நாயகனாக இடம்பெறுவது தான் கடினம். வெற்றி, தோல்வி என்ற கணக்கிற்கு அப்பாற்பட்ட விஷயம் இது. மக்களின் நாயகன் வரிசையில் மிக குறுகிய காலக்கட்டத்தில் இடம்பெற்றிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
சாதாரண மிமிக்ரி கலைஞனாக இருந்து தன்னம்பிக்கையாலும், தன் திறமையாலும் இன்று வசூல் நாயகனாக உருமாறியிருக்கும் சிவகார்த்திகேயனிடம் இருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன…
விடா முயற்சி
மிமிக்ரி கலைஞாக மேடை ஏறி, தொலைகாட்சி, சினிமா என ஒவ்வொரு வெற்றி படியாக சிவகார்த்திகேயன் ஏறியதற்கு காரணம் அவரது விடா முயற்சி மட்டும் தான்.
தன்னம்பிக்கை
யாரையும் நம்பாமல் தன் தன்னம்பிக்கை மற்றும் திறமையை மட்டுமே நம்பி வளர்ந்த கலைஞன் சிவகார்த்திகேயன். தமிழ் திரையுலகில் வெற்றி நாயகனாக ஜொலிக்க தன்னம்பிக்கையும், திறமையும் மட்டும் போதும் என்பதற்கு அன்று அஜித்தும், இன்று சிவாவும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
நேரத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
நேரம் பொன் போன்றது என்பதை உணர்ந்தவர் சிவகார்த்திகேயன். தன் வாழ்க்கையின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நேரத்தை வீணாடிக்காமல் உழைத்தான் காரணத்தினால் தான் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் சிவா.
வாய்ப்புகளை வீணடிக்கக் கூடாது
தான் வெறும் மிமிக்ரி கலைஞன் தான் என தொகுப்பாளர் வாய்ப்பை அவர் வீணடித்திருந்தால், இன்று முதல் நாளிலேயே பல கோடிகளை வசூல் செய்யும் வெற்றி நாயகனாக ஜொலித்திருக்க முடியாது. வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொண்டார், அதற்காக உழைக்கவும் செய்தார்.
சூழ்நிலை கடந்து வருதல்
தன் தந்தை இறந்த போதிலிருந்து, அது வெற்றியோ, தோல்வியோ அதில் இருந்து மீண்டு வந்த அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற துடிக்கும் சிவாவின் மன தைரியம் தான் அவரை இன்று இந்தளவிற்கு உயர்த்தியுள்ளது.
தோல்வியை தாங்கிக் கொள்ளுதல்
முதல் ஷூட்டிலேயே தொகுப்பாளாராக சிவா ஜொலிக்கவில்லை, தோல்வியை சந்தித்தார். ஆனால், வெற்றியடைய என்ன தேவை என அறிந்து கற்றுக்கொண்டு மீண்டும் வாய்ப்பினை பெற்று அதில் வென்றும் காட்டினார் சிவா.
ஏமாற்றங்களை கடந்து வருதல்
தனது நட்பு வட்டாரத்திலேயே பல ஏமாற்றங்களை எதிர்கொண்டதாக சிவா ஓர் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆம், இன்று வளர்ந்து வரும் ஓர் முக்கிய இயக்குனரின் முதல் படத்தில் இவர் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், வேறு ஒரு நாயகனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், இவர் புறக்கணிக்கப்பட்டார்.
ஏமாற்றங்களை கடந்து வருதல்
இந்த ஏமாற்றங்கள் எதுவும் சிவாவை தொய்வடைய செய்யவில்லை. அதற்கு பதிலாக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற முனைப்பை தான் அதிகரித்தது. அதன் பயனாக தான் இன்று பல முன்னணி நாயகர்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கிறார் சிவகார்த்திகேயன்.
உயரம் என்பது எட்டிப்பிடிக்கும் அளவு தான்
நாம் இன்று இந்த நிலையில் இருக்கிறோம், நம்மால் நாளை இந்த அளவு தான் முன்னேற முடியும். அதற்கு மேல் என்பது முடியாத காரியம் என்பது தவறு என்பதை நிரூபித்தவர் சிவகார்த்திகேயன். டிவி நிகழ்சிகளில் தன்னை கிண்டலடித்த நடிகர்களை விட பலமடங்கு உயர்ந்து நிற்கிறார் சிவா.
புகழ்
ஒவ்வொரு தருணத்திலும் இவர் ஒவ்வொரு படியாக மேலே ஏறிய போதிலும் தலையில் கனத்தை ஏறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் சிவா. இது தான் இவரது புகழ் நாளுக்கு நாள் அதிகரிக்க காரணமாக இருக்கிறது.
எங்கள் வீட்டு பிள்ளை
எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய் போன்றவர்களுக்கு பிறகு சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாபெரும் குடும்ப ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சிவா. இவரது படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும்.
கடின உழைப்பு
மிமிக்ரி கலைஞனாக இருந்த போதலும் சரி, தொகுப்பாளராக மாறிய போதிலும் சரி, அனைத்துக் கட்டத்திலும் தனது கடின உழைப்பை கொடுக்க சிவா மறக்கவே இல்லை.
உதவும் பண்பு
நடிகர் சிவகார்த்திகேயனிடம் மற்றுமொரு சிறந்த பண்பு, மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை. இதை பாராட்டவும் வேண்டும், பின்பற்றவும் வேண்டும்.
தொட்டது எல்லாம் வெற்றி
கடின உழைப்பால் தான் ஒரு காமெடி கலைஞாகவும் மட்டுமின்றி, தன் பங்கிருந்த அனைத்திலும் வெற்றிக் கண்டார் சிவா. சிவா தொகுத்து வழங்குகிறார் என்ற காரணத்திற்காகவே பல நிகழ்சிகளை மக்கள் பார்க்கக் துவங்கினர். இதற்கு காரணம் இவரது கவர்ந்திழுக்கும் பேச்சும், பாவனைகளும்.
மக்கள் நாயகன்
வெற்றி நாயகனாக யார் வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால், மக்களின் மனதில் என்றும் நாயகனாக ஜொலிக்க சிலரால் மட்டுமே முடியும். அந்த பட்டியலில் மிக குறுகிய காலக்கட்டத்தில் நுழைந்தவர் சிவகார்த்திகேயன்.
Tags:
Cinema
,
எம்.ஜி.ஆர்.
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
ரஜினி
,
விஜய்