தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஒரு வருடத்திற்கு நூறு படங்களுக்கு மேலாக வெளிவருகிறது.
தமிழ் திரைப்படங்கள் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் மாற்றான் போன்ற படங்கள் நோர்வேயில் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ் சினிமா கலைஞர்கள் நோர்வேயில் படப்பிடிப்பு செய்தால் 25 சதவிகிதத்தை நோர்வே அரசாங்கம் தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தரவுள்ளதாம். தொடர்ந்து 7வது வருடம் நோர்வே தமிழ் திரைப்பட விருது விழாவை நடத்தவுள்ள வசீகரன் சிவலிங்கம் இதுபற்றி கூறியுள்ளார்.
மேலும் இதுவரை ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளதுடன் இந்த வருடம் நடைபெறவுள்ள தமிழர் விருது 2016 பற்றிய விபரங்களையும் அளித்துள்ளார்.நோர்வே விருது விழாக்குழுவினர் இந்த வருடம் முதல் நடுவர்குழுவை நியமித்து புதிய நடைமுறையை கொண்டு வரவுள்ளது.
இது பற்றிய புதிய விபரங்களை அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
திரையுலகம்
,
நோர்வே
,
மாற்றான்
,
விருது விழா