தமிழ்த்திரையுலகில் உள்ள ஏராளமான நடிகர் நடிகையரை வைத்து ஒரு பாடலைப் படமாக்கிக்கொண்டிருக்கிறார் விக்ரம். தி ஸ்பிரிட் ஆப் சென்னை என்று பெயரில் உருவாகும் அந்தப்பாடலை அவரே இயக்குகிறார்.
விஜய்மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இதுவரை சூர்யா, விஜயசேதுபதி, பாபிசிம்ஹா, பிரபுதேவா, ஜெயம்ரவி, ஜீவா, பரத், அமலாபால், வரலட்சுமிசரத்குமார், விஷ்ணு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மும்பையிலிருந்து அபிஷேக்பச்சன், கேரளாவிலிருந்து நிவின்பாலி ஆகியோரும் இந்தப்பாடலில் தோன்றுவதற்காக சென்னை வந்தனர். நயன்தாராவும் இந்தப்பாடலில் நடித்துவிட்டார். சுமார் ஒருமணிநேரம் அவர் சம்பற்தப்பட்ட படப்பிடிப்பு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தப்பாடலில் விஜய், அஜீத் ஆகிய இருவரையும் இந்தப்பாடலுக்குள் கொண்டுவந்துவிட விக்ரம் நினைத்தார். அதில் பாதி வெற்றி கிடைத்திருக்கிறதாம்.
விஜய் வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அஜித் ஓய்வில் இருப்பதால் அவர் வருவது சந்தேகம் என்கிறார்கள். பத்தாம்தேதியோடு முடியும் இந்தப்படப்பிடிப்பில் விஷால், குஷ்பு ஆகியோரும் பங்குபெறவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Tags:
Ajith
,
Cinema
,
Vijay
,
அஜித் வரமாட்டார்
,
சினிமா
,
விஜய் வருகிறார்