Director: Atlee Kumar
Music composed by: G. V. Prakash Kumar
Produced by: Kalaipuli S. Thanu
Cinematography: George C. Williams
தெறி போலீஸ் கதை : இயக்குனர் அட்லி தகவல்!
விஜய், சமந்தா, எமிஜாக்சன், இயக்குனர் மகேந்திரன் நடித்து வரும் படம் தெறி. ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லி இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தின் கதை பற்றி ரகசியம் காத்து வந்தார்கள். என்றாலும் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்ற தகவல் கசிந்தது. இப்போது அதனை படத்தின் இயக்குனர் அட்லி உறுதி செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: 'போலீஸ் அதிகாரி என்றால் முரட்டுத்தனமாக, விரைப்பாக, கோபமாக இருக்கிறவராகத்தான் பார்த்திருக்கிறோம். ஏன் அவர் ஒரு அண்ணன் மாதிரி, ஒரு பக்கத்து வீட்டுக்காரர் மாதிரி உதவின்னு கேட்டா மனிதாபிமானத்தோடு ஓடி வந்து உதவுகிற மாதிரி இருக்க கூடாது. இந்த சிந்தனையில் உருவானது தான் விஜய் சார் கேரக்டர். பேமிலி செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் படம்.
என் மனதில் இருந்த ஒரு கேரக்டர் மாதிரியே மகேந்திரன் சார் இருந்ததால் அவரை நடிக்க வைக்கிறேன். பல குழந்தைகள் பார்த்து திருப்தி ஏற்படாமல் வெறுத்துபோய் உட்கார்ந்திருந்தபோது என் மனைவிதான் மீனாவின் மகளை அறிமுகப்படுத்தினார். விஜய் சார், மகேந்திரன் சார் கேரக்டருக்கு இணையாக அவரது கேடக்டருக்கும் முக்கியத்தும் இருக்கு. எமி, சமந்தா இருவருக்குமே வலுவான கேரக்டர். ராதிகா மேடமும் காமெடியான, ஜாலியான ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். என்கிறார் அட்லி.
Tags:
Review
,
Theri Movie Review
,
Theri Review
,
தெறி திரைவிமர்சனம்
,
தெறி விமர்சனம்