தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. இவருக்கு சமீபத்தில் ஒரு விருது விழாவில்
அமிதாப் பச்சன் விருது கொடுக்கப்பட்டது.
இவ்விருதை அறிவித்த சுஹாசினி பேசுகையில் ‘இன்று காலை அமிதாப் பச்சன் எதற்காக நயன்தாராவிற்கு இந்த விருதை கொடுக்கிறீர்கள் என போனில் கேட்டார்.
அதற்கு நான், தமிழ் சினிமாவை ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 12 வருடங்களாக முதல் இடத்திலேயே நயன்தாரா இருக்கிறார், அதுமட்டுமில்லாமல், அவரை திரையில் காட்டினாலே ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்கிறார்கள்,
ஒரு
சூப்பர் ஸ்டாருக்கு நிகராக
நயன்தாராவின் வளர்ச்சி உள்ளது என நான் அவரிடம் கூறினேன்’ என்று சுஹாசினி தெரிவித்துள்ளார்.
Tags:
Cinema
,
Nayanthara
,
அமிதாப் பச்சன்
,
சினிமா
,
சுஹாசினி