பாலா இயக்கத்தில் சசிக்குமார், வரலக்ஷ்மி நடிப்பில் சமீபத்தில் வெளியான தாரை தப்பட்டை திரைப்படம் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக நடிகை வரலக்ஷ்மி, இப்படத்தில் சூறாவளி எனும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருப்பதாக அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த நடிகை த்ரிஷா, வரலக்ஷ்மியை குறிப்பிட்டு , நான் மட்டும் உன் தோழியாக இல்லாமல் இருந்திருந்தால், தாரை தப்பட்டையில் உனது அற்புதமான நடிப்பை கண்டு நிச்சயமாக பொறாமைப் பட்டிருப்பேன் என டிவிட்டரில் கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
Tharai Thappattai
,
சினிமா
,
தாரை தப்பட்டை
,
த்ரிஷா
,
வரலக்ஷ்மி