நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் தெறி என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் விஜய் காவல் அதிகாரியாகவும், சமந்தா மருத்துவராகவும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் கடைசி கட்ட படப்பிடிப்பை லடாக்கில் முடித்து விட்டு இப்படத்துக்கு பூசணிக்காய் உடைத்து மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டனர். இந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு இன்னொரு கெட்டப்பும் உள்ளது, அதை வெளியே சொல்லாமல் இருந்த படக்குழு, நேற்று வெளியான ரசிகரின் புகைப்படம் முலம் வெளிச்சத்துக்கு வந்தது.
இதில் மொட்டைத்தலையில் லேசாக முடிவளரும் தோற்றத்துடன் விஜய் காட்சியளிக்கிறார். இது தொடர்பான காட்சிகள் அனைத்தையும் லடாக் பகுதிகளில் படம்பிடித்திருக்கின்றனர். ஏற்கனவே அஜித் ரெட் மற்றும் வேதாளம் படத்தில் இதே கெட்டப்பில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
தெறி
,
விஜய்
,
வேதாளம்