விஜய் , அஜித் இருவருக்குமே தனி ஸ்டைல், மேனரிசம் என அடித்துகொள்ளவே முடியாது. விஜய் யூத் லுக்கிங் , சின்ன போனி டெயில், செக்ட் ஷர்ட், பைக் மேனியா என கண்டிப்பாக எமி ஜாக்சன் மட்டுமல்ல எந்தப் பொண்ணாக இருந்தாலும், ‘இவருக்கு ஒரு பொண்ணு இருக்கா? இருந்தாலும் ஓகே மச்சி!’ என சொல்லி விடுவார்கள். அஜித் கொஞ்சம் ஜீனியஸ் லுக், சீரியஸ் ஃபேஸ், ஸ்டைலிஷ் மேன் சால்ட்&பெப்பர் என பெண்களின் மற்றொரு சாய்ஸ் ரகமான ‘ப்ளீஸ் நான் உங்க பொண்ணுக்கு அம்மாவா வரலாமா?’ பாணி ஃபாதர்.. இந்த ஸ்டைல் விஷயத்தில் இருவருக்குமே பக்காவான தனித்தனி வழிதான்.
பொறுப்பு :
விஜய்யின் ஸ்டைல் குறும்பு, ஜாலி கேலி டாடி என்பதால் பொறுப்பில்லாமல் மகளை வளர்ப்பதில் சற்றே சிக்கல் என்றாலும் மகளுக்கு ஒரு சின்ன அடியென்றாலும் இறங்கி அடிக்கும் மாஸ் கேரக்டர். அதை மிக அழகாகவே செய்திருப்பார். என்ன செய்ய வேனுடன் மகள் தண்ணிருக்குள் விழும் வரை விட்டிருக்கக் கூடாதல்லவா… என்னை அறிந்தால் படத்தில் அஜித் சீரியஸ் அப்பா.. கொஞ்சம் பொறுப்புகள் அதிகம். மகள் கடத்தப்பட்டாலும், ஒரு சின்ன அடி கூட இல்லாமல் காப்பாற்றிவிடுவார் . விஜய்யை கொஞ்சம் ஓவர் டேக் செய்திருப்பார் அஜித்…டாடி டாடி ஓ மை டாடி..
அப்பா மகள்:
ஸ்க்ரோல் செய்து படத்தைக் காணவும்
என்னை அறிந்தால் படத்தில் வளர்ப்பு மகள் என்பதாலேயோ என்னவோ மகளாக வரும் அனிகா அஜித்திடம் ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக, கொஞ்சம் யோசித்து தள்ளி நின்றே பேசுவார். அஜித்தும் மகளை கொஞ்சம் எட்ட நின்று ஹை க்ளாஸுக்கே உரிய பெண் பிள்ளைகள் தனியறை, அப்பா பாதுகாப்பு என இருப்பார் . அதே இங்கே கதையே வேறு. பேபி ஏன் பேபி டெய்லி இப்படிப் பண்ற , எனக் கொஞ்சுவதும், “ மாஸ் க்ளாசாக சேற்றை வாரி இறைத்த காரை விரட்டிச் சென்று சாரி சொல்லச் சொல்லி விஜய் நின்றவுடன் ..த்தூ என நைனிகா செல்லமாக துப்புவதும் ஃப்ரெண்ட்லி அப்பாவாக விஜய் அஜித்தை ஓவர்டேக் செய்திருப்பார்.
மாஸ் டாடி:
என்னத் தாண்டி போய் தொடுடா என தூங்கும் மகளுக்காக சண்டையிடும் அப்பாக்களின் மாஸ் ஃபைட்டுகள் தெறி, என்னை அறிந்தால் என ரெண்டு படங்களிலும் உள்ளன. இங்கே ஒருவருடன் சண்டை என்றாலும் ஆங் …அவரு அருண் விஜய் என அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டலாம் ..இங்கே வேண்டாம்ம்ம்ம்ம்…. என அரட்டி உருட்டி மழையில் பத்து பேரை துவம்சம் செய்யும் காட்சி. என இரண்டுமே மகள்களின் தூக்கம் கூட கெடக்கூடாது என்பதில் மிக ஜாக்கிரதையாக இரண்டு அப்பாக்களும் கையாண்டிருப்பார்கள். நமக்கெல்லாம் நாலு மணிக்கு உதவாக்கரைனு திட்ற அப்பாதான் இருக்காங்க!
சொதப்பல்:
மகளிடம் ஏகபோகத்துக்கு நல்லவராக இருக்கும் அஜித் அருண் விஜய்யிடம் கெட்ட வார்த்தையில் பேசுவது கொஞ்சம் ஓவர். அடடே எப்படிப்பட்ட அப்பா என நினைப்பதற்குள் இங்கே சற்றே சறுக்கினாலும் பரவாயில்லை பாணி. போலீஸ் என்றால் அப்படி தான்.
அக்யூஸ்ட்களிடம் அன்பு காட்டவா முடியுமா. எனினும் அனுஷ்கா தங்குவதற்கு மகளிடம் பெர்மிஷன் கேட்டு தங்க வைப்பது கொஞ்சம் டூ மச்… அதாகப்பட்டது கூட்டிக் கொண்டு வருவதற்கு முன்பே அல்லவா கேட்டிருக்க வேண்டும்.. ஜாலி டாடியின் குறும்பு மகள் நைனிகா “பேபி வொர்க் அவுட் ஆகுது”.. ”ஏன் மிஸ் நீங்க எதுனா பிளான் வெச்சிருக்கீங்களா” என எமியிடம் கொஞ்சம் அதிக பிரசிங்கித் தனம் காட்டும் போது குறும்பு விஜய் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டாரோ என யோசிக்கவும் தோன்றுகிறது.
கேரக்டர் தேர்வு:
அஜித் என்றால் கொஞ்சம் சீரியஸ், பொறுப்பு, ஹை க்ளாஸ், அளவான பேச்சு என படங்களுக்கு மட்டுமல்ல நிஜத்திலும் அப்படி தான் என்கையில் அவரது கேரக்டருக்கு என்னை அறிந்தால் படத்தின் பொறுப்பான சிங்கிள் ஃபாதராக பக்கா பொருத்தம். அதையே விஜய்க்கு கொஞ்சம் வார்த்தைகளை அளந்து பேசி, பொறுமையாக முடிவெடுப்பதெல்லாம் செட்டே ஆகாது.
விஜய், ”பேபி கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு என சொல்லிவிட்டு இருவருமே ஒரு காட்டு காட்டுவதும், கொஞ்சம் தூங்கிக்கறேன். இப்படி படம் முழுக்க ஈனா மீனா டீகா பாட்டுப் பாடி அசத்துவதும் என ஜாலியான சிங்கிள் ஃபாதராக விஜய் கிரேட் சாய்ஸ்… அதே அஜித்தை நம்மால் கொஞ்சம் மகளிடம் வலிந்து கண்ணடித்து பேசுவதெல்லாம் நினைத்துப் பாக்கவே முடியாது.
அங்கே செண்டிமெண்ட்டான ,பொறுப்பான சீரியஸ் அப்பா, இங்கே ஜாலியான பாசமான ஃப்ரெண்ட்லி அப்பா என இருவருமே தங்களுக்கு எந்த வகை கேரக்டர் பொருந்துமோ அதை தேர்வு செய்து நடித்துள்ளனர்.
ரிசல்ட்:
”அடுத்து நாம எங்கப் போகப் போறோம் சத்யா”… என்னும் அனிகாவின் அப்பா அஜித்தாகட்டும்… ”தெறி பேபி” என்னும் நைனிகாவின் அப்பா விஜய்யாகட்டும் இருவருமே சிங்கிள் பேரன்டாக சிக்ஸர் அடித்துள்ளனர். அதனால மக்களே விஜய், அஜித் ரெண்டு பேருமே தமிழ் சினிமாவுக்கு ரெண்டு முத்துக்கள்.
Tags:
Cinema
,
அனிகா
,
அஜித்
,
சினிமா
,
நைனிகா
,
யூத் லுக்கிங்
,
விஜய்
,
ஜீனியஸ் லுக்