பீப் சாங் என்ற பெயரில் ஆபாசப்பாடலை உருவாக்கியதற்காக நடிகர் சிம்பு இசையமைப்பாளர் அனிருத் மீது தமிழகம் முழுக்க பல்வேலறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம் காவல்நிலையங்களில் புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பீப் சாங் விவகாரத்தில் தேவையில்லாமல் என் பெயரை இழுத்துவிட்டுள்ளனர், எனக்கும் அதற்கு சம்மந்தமில்லை என்று கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் இரவோடு இரவாக சென்று விளக்கம் அளித்துவிட்டார் அனிருத்.
நடிகர் சிம்புவோ ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் ஏடாகூடமாகவே செயல்பட்டு வருகிறார். ஆமாம் நான்தான் இந்த பீப் சாங்கை உருவாக்கினேன்... இதுபோல் 150 பாடல்கள் உருவாக்கியுள்ளோம்... என்மேல் தப்பில்லை இதை வாட்ஸ்அப்பில் வெளியிட்டவன் மேல்தான் தப்பு உங்களுக்குப் பிடிக்கலைன்னா கேட்காதீங்க... என்று எடக்கு மடக்காகவே பேசி வரும் சிம்பு இன்னொரு பக்கம் நீதிமன்றத்திலும் வழக்குமேல் வழக்கு தொடுத்து வருகிறார்.
அதாவது போலீஸ் மற்றும் நீதிமன்றத்தின் நடவடிக்கையைக் குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இறுதியாக, நீதிமன்றம் கொடுத்த கெடுவின்படி நேற்று அவர் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் அவர் ஆஜராகாதது மட்டுமில்லை, தான் ஆஜராக மேலும் கெடுவிதிக்கும்படி நேற்று புதிய வழக்கு தொடுத்துள்ளார். அதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறதாம் காவல்துறை.
இந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவுக்கு பிறந்தநாள். அன்றைய தினம் சிம்பு நடித்த இது நம்ம ஆளு படத்தின் இசைவெளியீட்டை நடத்த திட்டமிட்டுள்ளார் டி.ராஜேந்தர். அன்றைக்கு பிரஸ்மீட் நடத்தவும் உள்ளார். இதுவரை தலைமறைவாக உள்ள சிம்பு அன்றைய தினம் நிச்சயம் வெளியே தலைகாட்டித்தான் ஆக வேண்டும். எனவே பிப்ரவரி 3 அன்று சிம்புவை கைது செய்து அவர் மீதான நடவடிக்கையை தொடங்க இருக்கிறதாம் காவல்துறை.
Tags:
Beep song
,
Cinema
,
சிம்பு
,
சினிமா