தற்போது தமிழ்த் திரையுலகில் முக்கிய படங்களை தன் கைவசம் வைத்திருப்பவர் சமந்தா மட்டுமே. அந்த மூன்று படங்களுமே தனக்கு ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றுத் தரும் என்று சமந்தா அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்.
தனுஷுடன் நடித்துள்ள தங்கமகன் படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது. விஜய்யுடன் நடித்துள்ள தெறி அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவுடன் நடித்துள்ள 24 படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
தற்போதுள்ள முன்னணி நடிகைகளில் வேறு யாருக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை. மூன்று படங்களுமே வெவ்வேறு விதமான கதைகள், கதாபாத்திரங்கள் என்பதால் தமிழில் தனக்கு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுத் தரும் என சமந்தா எதிர்பார்த்துள்ளாராம்.
Tags:
Cinema
,
சமந்தா
,
சினிமா