ஹீரோக்கள் என்றாலே இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மாதிரிதான் ஹேர்ஸ்டைல் வைத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, 50 வயதை கடந்தாலும் ஒரு நரைமுடிகூட தலையில் தெரியக்கூடாது என்று நீண்டகாலமாக இருந்து வந்த சினிமா கோட்பாடுகளை மங்காத்தா படத்தில் அடித்து உடைத்தெறிந்தவர் அஜித்.
அதுவும் தனது தலையில் இருக்கும் பாதி நரைத்த முடியுடனேயே அவர் நடித்து வருகிறார். அதன்பிறகும் ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால், வேதாளம் என்று தொடர்ந்து வருகிறார் அஜித். இந்த நிலையில், தற்போது தெறி படத்திலும் அஜித் போன்றே தனது தலை முடியை ஒட்ட வெட்டிக்கொண்டு ஒரு கெட்டப்பில் நடித்திருக்கிறார் விஜய். சமீபத்தில் அந்த கெட்டப்பின் புகைப்படங்களும் வெளியானது.
அவரைத் தொடர்ந்து இப்போது கமல்ஹாசனும் தான் நடிக்கயிருக்கும் அப்பா அம்மா ஆட்டம் படத்திற்காக தலை முடியை ஒட்ட வெட்டிக்கொண்டு காட்சி கொடுக்கிறார். ஏற்கனவே தன்னை வைத்து சாணக்யா படத்தை இயக்கிய ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிக்கும் அந்த படத்திற்காக தலைமுடியை அஜித்தைப் போன்று சிறிய அளவில் மட்டுமே வைத்திருப்பதோடு, முகத்தில் மீசை இல்லாமலும் நடிக்கிறார். அதேசமயம் அஜீத் மாதிரி நரைமுடியுடன் நடிக்கவில்லை கமல்.
Tags:
Cinema
,
அஜித்
,
கமல்
,
சினிமா
,
தெறி
,
மங்காத்தா
,
விஜய்