எய்ட்ஸ் நோயால் வீழ்ந்த மோகன் - அந்த நடிகையே காரணம்..!!

11:33 PM |
மைக் மோகன்..மறக்கமுடியுமா..? வெள்ளி விழா நாயகன்.இவர் நடித்த படங்கள் எல்லாமே மெகா ஹிட்ஸ்..! பாலுமகேந்திராவின் அறிமுகம்..நெஞ்சத்தைக் கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை என ஆரம்பித்த மோகனின் சினிமா கேரியர் ஜிவ்வென பறந்தது..!

எண்பதுகளில் மோகன் இளையராஜா கூட்டணி பட்டையைக் கிளப்பியது..! ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரங்கள் நடித்தார்..! நன்றாகப் போய்கொண்டிருக்கிறது என்று மோகன் எண்ணிய போது தான் இவருக்கு எய்ட்ஸ் நோய் வந்திருக்கிறது என்கிற செய்தி தீயாகப் பரவியது..! தொண்ணூறுகளில் எயிட்ஸ் நோய் என்றாலே அலறும் காலகட்டம்…! அவ்வளவு தான் ஆட்டம் க்ளோஸ்..! இவரைக் கண்டாலே ஹீரோயின்கள் பதறி, கதறி ஓட ஆரம்பித்தனர். தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடினர்.

இயக்குனர்கள் வீடுகளை  காலி செய்துவிட்டு வேறு ஏரியா போனார்கள். பக்கத்தில் உள்ள வீடுகளில் கதவு ஜன்னல்கள் எல்லாம் இழுத்து அடைக்கப் பட்டன..! மோகனும் வீட்டை விற்று விட்டு வேறு ஏரியா ஓடினார்..! சினிமா வாழ்கையே முடிந்து விட்டது. ஆனால் இப்போதும் மோகன் நன்றாகத்தான் இருக்கிறார். மோகன் இது குறித்து ஒரு இதழுக்கு பேட்டி கொடுத்தார்.எல்லாம் என்கூட தொடர்ந்து நாயகியாக நடித்த பூ—ன் நடிகை தான் காரணம்..

அவர் என்னை  திருமணம் செய்ய ஆசைப் பட்டார் நான் மறுத்தேன். இனி உன்னை யாரும் திருமணம் செய்யக் கூடாது என்று முடிவெடுத்து இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டார்.. அந்தப் புண்ணியவதியால் சினிமாவில் இருந்தே விரட்டப்பட்டு விட்டேன்..வாழ்க வளமுடன் என்று நொந்து போய் சிரித்தார் ..!
மேலும் வாசிக்க…

இப்படியும் ஒரு நடிகையா..? ஆச்சரியத்தில் திரையுலகம்..!!

12:51 AM |
குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்ப்பில் டி.விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் படம் ‘முத்துராமலிங்கம்’. கெளதம் கார்த்திக் நாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்து வரும் இப்படத்தை ராஜதுரை என்பவர் இயக்கிவருகிறார். இந்தப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பதும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இளையராஜாவோடு இந்தப்படத்தில் பஞ்சுஅருணாசலம் இணைகிறார் என்பதும் படத்துக்குப் பெரிய விளம்பரமாக அமைந்துவிட்டது.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் அமர்க்களமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது தயாரிப்பு தரப்பின் சொதப்பல் காரணமாக முதல்கட்டப் படப்பிடிப்போடு நிற்கிறதாம் படம். மேற்கொண்டு படத்தை தொடருவார்களா? என்பது சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் முதல் கட்டப் படப்பிடிப்பின் போதே படக்குழுவினருக்கு உரிய வசதிகளைத் தயாரிப்பு தரப்பு செய்து தரவில்லையாம்.

அதோடு படப்பிடிப்பு முடித்துவிட்டு எல்லோரும் கிளம்புகிற நேரத்தில், படக்குழுவினர் தங்கியிருந்த ஹோட்டல் கட்டணம் உட்பட கடைசிநேரத்தில் கொடுக்கவேண்டிய தொகையை தயாரிப்புத் தரப்பு கொடுக்கவில்லையாம். இதனால் கட்டணத்தை கொடுத்து விட்டு கிளம்புமாறு ஹோட்டல் தரப்பு கூறிவிட, படக்குழு செய்வதறியாமல் தவித்து நின்றதாம்.

இந்த செய்தி நாயகி பிரியா ஆனந்தின் காதுகளை எட்ட அவர் சற்றும் தாமதிக்காமல் தன்னுடைய வங்கியிலிருந்து பணத்தைக் கொடுத்து அவர்களை மீட்டிருக்கிறார். படம் மேற்கொண்டு வளருமா? என்பதே சந்தேகம்தான் என்ற நிலையில் துளி கூட கவலைப்படாமல், தனது பணத்தைக் கொடுத்த பிரியா ஆனந்தின் செயல் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

வந்தோமா..? நடித்தோமா..? காசை வாங்கினோமா..? என்று இருக்கும் பல நடிகைகள் மத்தியில் இப்படி ஒரு நடிகையா..?
மேலும் வாசிக்க…

தேசிய விருதுகள் அறிவிப்பு – விருது வென்றவர்கள் முழு லிஸ்ட் இதோ..!!

4:08 AM |
இந்திய சினிமாவை கௌரவப்படுத்தும் விதமாக வருடா தோறும் இந்திய அரசு தேசிய விருதுகளை கொடுத்து வருகின்றது. அந்த வகையில் 63வது தேசிய விருது வென்றவர்கள் பட்டியல் இன்று வெளிவந்துள்ளது. விருது வென்றவர்களின் முழு லிஸ்ட் இதோ உங்களுக்காக….

சிறந்த நடிகர் – அமிதாப் பச்சன்(PIKU)
சிறந்த நடிகை – கங்கனா ரன்வத்(தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்)
சிறந்த இயக்குனர் – சஞ்சய் லீலா பஞ்சாலி( பஜிரோ மஸ்தானி)
சிறந்த படம் – பாகுபலி
திரைப்பட துறைக்கு உகந்த மாநிலம் – குஜராத்
சிறந்த தமிழ் படம் – விசாரணை
சிறந்த தெலுங்கு படம் – காஞ்சி
சிறந்த மலையாள படம் – பதேமேரி
சிறந்த கன்னட படம் – திதி
சிறந்த ஹிந்தி படம் – தம் லகா கே ஹைசா
சிறந்த நடன அமைப்பாளர் – ரெமோ டி சோசா ( பஜிராவ் மஸ்தானி )
சிறந்த பின்னணி இசை – இளையராஜா ( தாரை தப்பட்டை )
சிறந்த எடிட்டிர் – மறைந்த கிஷோர் ( விசாரணை )
சிறந்த வசனம் மற்றும் திரைக்கதை – பிகு, தானு வெட்ஸ் மனு
சிறந்த ஒளிப்பதிவு – பஜிராவ் மஸ்தானி
சிறந்த இசை – எம். ஜெயச்சந்திரன் ( என்னு நிண்டே மொயிதீன் )
சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி ( விசாரணை )
Special Mention சிறந்த நடிகை – ரித்திகா சிங் ( இறுதிச்சுற்று )
Special Mention சிறந்த நடிகர் – ஜெயசூர்யா ( மலையாளம் )
பிரபலமான படம் – பஜ்ரங்கி பைஜான்
சிறந்த VFX – பாகுபலி
மேலும் வாசிக்க…

அஜித்தை பேட்டியெடுக்க வேண்டும் – டிடியின் விருப்பம்..!!

3:18 AM |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘காபி வித் டிடி’ நிகழ்ச்சியின் மூலம் பல திரை பிரபலங்களிடம் பேட்டி எடுத்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இதுவரை இளையராஜா, மணிரத்னம், ஏ.ஆர்.ரகுமான் போன்ற பல ஜாம்பவான்களை பேட்டி எடுத்திருந்தாலும் ‘தல’ அஜித்தை பேட்டி எடுக்க வேண்டும் என்பதுதான் இவரது விருப்பமாம்.

இதுவரை யாருக்கும் பேட்டி கொடுக்காத அஜித்தை பேட்டி காண வேண்டும் எனவும் அவர் பேட்டி கொடுக்காவிட்டால், அட்லீஸ்ட் அவரை பெர்சனலாக சந்தித்து பேச வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அதேபோல் விஜய்யையும் அவர் பேட்டி காணவேண்டுமாம்.
மேலும் வாசிக்க…

அம்மாவானார் அமலாபால்..!!

11:18 PM |
ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘நில் பட்டே சன்னாட்டா’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அம்மா கணக்கு’ படத்தை நடிகர் தனுஷ் தனது உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் நடிகை அமலாபால் ஒரு 13 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்துள்ளார். இதில் அவர்தான் நடிக்க வேண்டும் என தனுஷ் கேட்டுக்கொண்டதாகவும் அவரது விருப்பத்தை அமலாபால் நிறைவேற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதில் ரேவதி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹிந்தியில் இப்படத்தை இயக்கிய அஸ்வினி ஐயரே தமிழிலும் இப்படத்தை இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
மேலும் வாசிக்க…

இளையராஜா விழாவுக்கு திரையுலகம் எதிர்ப்பு..!!

1:46 AM |
பாலா இயக்கிய தாரைதப்பட்டை இளையராஜாவின் ஆயிரமாவதுபடம் என்று அறிவித்தார்கள். அந்தப்படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவை ஆயிரம்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கான பாராட்டுவிழாவாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

சென்னையை புரட்டிப்போட்ட மழைவெள்ளம் காரணமாக அது நடக்காமல் போனதாகச் சொல்லப்பட்டது. அதன்பின்னர், இளையராஜாமியூசிக்மேனேஜ்மெண்ட் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியும் இணைந்து, ஆயிரம் படங்களைக் கடந்த இளையராஜாவுக்குப் பிரமாண்ட பாராட்டுவிழாவை நடத்துவதாக அறிவித்திருக்கின்றனர். இந்தவிழா பிப்ரவரி 27 ஆம் தேதி சென்னையில் நடக்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திரையுலகம் சார்பில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இளையராஜாவைப் பாராட்டுவதற்கு திரையுலகம் ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்? இளையராஜாவைப் பாராட்டுவதை எதிர்க்கவில்லை, அந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி நடத்துவதைத்தான் எதிர்க்கிறார்களாம்.

விஜய்தொலைக்காட்சிக்கும் தயாரிப்பாளர்கள்சங்கத்துக்குமிடையே திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமம் வாங்குவது தொடர்பாக, ஏற்கெனவே கருத்துவேறுபாடு இருக்கிறதாம். இதனால் இந்நிகழ்ச்சியை நடத்தும் உரிமையை விஜய் தொலைக்காட்சிக்குக் கொடுக்கக்கூடாது என்று திரையுலகம் சார்பில் இளையராஜாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார்களாம்.

இந்தவிசயம் தெரியாமல் அவர்களுக்கு நிகழ்ச்சி நடத்தும் அனுமதியைக் கொடுத்துவிட்ட இளையராஜா இப்போது என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாராம். ஓரிருநாளில் விழாவை விஜய் தொலைக்காட்சி நடத்துமா? நடத்தாதா? என்பது தெரிந்துவிடுமாம்.
மேலும் வாசிக்க…

கவுதம் கார்த்திக் படத்திற்காக இளையராஜா இசையில் பாடிய கமல்ஹாசன்..!!

10:34 PM |
குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”.

இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா” என்று தொடங்கும் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

நடிகை அசினின் அப்பாவை கழற்றிவிட்டுவிட்டு அசினுடன் கமல் ரூம் போட்ட கதை..!! 

மேலும் இப்படத்திற்கு ஒரு சிறப்பம்சமுண்டு, 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் இசைஞானி இளையராஜாவின் இசைகேற்ப பாடல் வரிகள் எழுதியுள்ளார். முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு (முத்துராமன், கார்த்திக், கவுதம் கார்த்திக்) பாடல் எழுதியுள்ளார் பஞ்சு அருணாசலம். இப்படத்தின் வாயிலாக பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றனர்.

கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிக்கும் இப்படத்தில் சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர்.

குளோபல் மீடியா ஒர்க்ஸ் விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு செந்தில்குமார். இப்படத்தின் நிர்வாக மேற்பார்வை கமுதி செல்வம்.
மேலும் வாசிக்க…

கமலுக்கு ஜோடியாகும் ரம்யா கிருஷ்ணன்..!!

9:41 PM |
‘உலக நாயகன்’ கமல் ஹாசன் அடுத்ததாக மலையாள இயக்குனர் ராஜீவ் குமார் இயக்கத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் கமல் மகளாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவிருப்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

இந்நிலையில் தற்போது இதில் கமல் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. பஞ்ச தந்திரம்படத்துக்கு பிறகு இவர்கள் இருவரும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘இசைஞானி’ இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.
மேலும் வாசிக்க…

வரலட்சுமிக்கு ரஜினிகாந்த் பாராட்டு..!!

1:19 AM |
தாரை தப்பட்டை படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியானது. இளையராஜாவின் 1000மாவது படம் என்ற சிறப்புடன் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமையவில்லை. படத்திற்க கடும் விமர்சனங்கள் எழுந்து நிலையில் வசூல் ரீதியாக பொங்கல் படங்களில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

பாலா, இளையராஜா, சசிகுமார் ஆகியோர் விமர்சகர்களால் அதிகம் விமர்சிக்கப்பட்டாலும் படத்தில் கதாநாயகியாக நடித்த வரலட்சுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர். ஒரு கரகாட்டக் கலைஞராக அப்படியே வாழ்ந்து காட்டினார் என்ற பாராட்டு அவருக்கு அதிகமாகக் கிடைத்து வருகிறது. அவருடைய நடிப்பும், கிளாமரும்தான் படத்தைக் காப்பாற்றியது என்று வினியோகஸ்தர்களே தெரிவித்தார்கள்.

திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் வரலட்சுமிக்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது ரஜினிகாந்தும் வரலட்சுமியைப் பாராட்டியுள்ளார். இது குறித்து வரலட்சுமி, “ஓ மை காட், நான் இப்போது மிக மிக மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். சூப்பர் ரஜினிகாந்த் தற்போதுதான் என்னுடன் தொலைபேசியில் பேசினார். உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி சார். மிகவும் அற்புதமாக உணர்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com