அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வேதாளம். இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது அஜித்துக்கு காலில் அடிப்பட்டது. ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால், சில நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் அஜித், மேலும் ஓய்வெடுப்பதற்காக லண்டன் செல்ல இருக்கிறார். லண்டனில் இரண்டு மாதம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்பின்னர் சென்னை திரும்பும் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
வீரம், வேதாளம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த புதிய படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.
Tags:
Ajith
,
Cinema
,
Vedalam
,
அஜித்
,
சினிமா
,
வீரம்
,
வேதாளம்