சிக்கலில் அஜீத்தின் இயக்குநர்..!!

7:58 PM |
அஜித்தை வைத்து வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா அவருடைய அடுத்தபடத்தையும் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. அஜித் இப்போது ஓய்வில் இருக்கிறார்.

ஓய்வு முடிந்தவுடன் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் அந்தப்படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதுதான் நடக்கும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் திரையுலகினர். ஆனால் அதில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இயக்குநர் சிவா, தமிழில் முதல்படம் இயக்க வந்தபோது அந்தப்பட நிறுவனத்துக்கு இன்னொரு படம் இயக்குவதாக ஒப்புக்கொண்டு முன்தொகையும் வாங்கியிருந்தாராம் சிவா. ஆனால் தொடர்ந்து அஜித்தோடு பணியாற்றுவதால் அவர் சொல்கிற தயாரிப்பாளர்களுக்கே படம் பண்ணும் நிலை அமைந்துவிட்டது. அடுத்தபடமும் வேறு தயாரிப்பாளருக்கே இயக்குகிறார் என்ற செய்தி வந்தவுடன், எங்கள் நிறுவனத்தில் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்களே என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கேட்டிருக்கிறார்கள்.

இந்தவிசயம் தெரிந்த இப்போதைய தயாரிப்புநிறுவனம் அந்தச்சிக்கலைச் சரிசெய்துவிட்டு வாருங்கள் என்று இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார்களாம். அதனால் முதல்படத் தயாரிப்பாளரோடு பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம் இயக்குநர். சிக்கல் சரி செய்யப்பட்டுவிடுமா?  
மேலும் வாசிக்க…

அனிருத்துக்கு ஆதரவளிக்கும் அஜீத்..!!

1:16 AM |
அஜீத்தின் இமை அசைகிற இடத்தை பார்த்து அதற்கேற்ப அசைகிறவர் டைரக்டர் சிவா! “சினிமாங்கறது ஏதோ பஸ்ல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்குகிற பயணம் அல்ல. குறைந்தது ஆறு மாதங்களாவது ஒரே திசையில் பயணம் செல்கிற வேலை. அதுக்கு டைரக்டர், புரட்யூசர், ஹீரோ மூணு பேருக்கும் வேவ் லெங்க்த் ஒண்ணாயிருக்கணும். அப்பதான் லாங் டிராவல் போக முடியும்” என்பதுதான் அஜீத்தின் பாலிஸி. தன் மனசுக்குள் இறங்கி மகுடி வாசிக்காத எவரையும் கிட்டே சேர்க்க மட்டுமல்ல, பார்க்கக் கூட மாட்டார் அவர். அந்த வகையில் சிவா, அஜீத்தின் மனசாட்சியாகி சில வருடங்கள் ஆகிறது.

அனிருத்துடன் வேதாளம் படத்தில் இணைந்து பணியாற்றியிருக்கிற அஜீத்திற்கு, இந்த முறையும் அவரே ஓ.கே என்றாகிவிட்டதாம். விளைவு? வேதாளம் சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போகும் அடுத்த படத்தின் இசை அனிருத்தேதான்.

வொய் திஸ் கொலவெறியில் ஒரேயடியாக உசரம் பார்த்து, பீப் பாடலில் ஒரேயடியாக தகரம் ஆகிவிட்ட அனிருத்தை அவரது நெருங்கிய உறவினரான தனுஷே துரத்தியடித்துவிட்டார். கிட்டதட்ட மூன்று படங்களிலிருந்து நீக்கவும் செய்யப்பட்டிருக்கிறார் அனிருத். இந்த நிலையில் “குழந்தை… தெரியாம பண்ணிருச்சு. மன்னிப்போம்… மறப்போம்…” என்ற மனநிலைக்கு வந்த அஜீத், “எது வந்தாலும் பேஸ் பண்ணலாம். அனிருத்தையே வரச்சொல்லுங்க” என்று கூறிவிட்டாராம் சிவாவிடம்.

ஆலுமா, டோலுமா கொடுத்த ஆனந்த ஹிட்டுதான் இதற்கெல்லாம் காரணமாக இருக்குமோ?
மேலும் வாசிக்க…

வெளிநாட்டுக்கு கிளம்பும் அஜித்..!!

10:22 PM |
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வேதாளம். இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பின் போது அஜித்துக்கு காலில் அடிப்பட்டது. ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டதால், சில நாட்களுக்கு முன்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வரும் அஜித், மேலும் ஓய்வெடுப்பதற்காக லண்டன் செல்ல இருக்கிறார். லண்டனில் இரண்டு மாதம் ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்பின்னர் சென்னை திரும்பும் அஜித், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

வீரம், வேதாளம் படத்தின் வெற்றியை அடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த புதிய படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறது.

மேலும் வாசிக்க…

அஜித் பிறந்த நாளில் ‘தல 57’ பட அறிவிப்பு..!!

11:27 PM |
வேதாளம் படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் தமிழ் புத்தாண்டு அல்லது அஜித் பிறந்த நாளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க…

அஜீத்தின் வேதாளம் பட ரீமேக்கிள் நடிக்கும் கன்னட சூப்பர் ஸ்டார்..!!

1:36 AM |
சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் வேதாளம். அனிருத் இசையமைத்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்தார்.

தீபாவளி அன்று வெளியான இப்படம், தீபாவளி அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் 100 கோடி வசூலை அள்ளிய படங்களில் வேதாளம் குறிப்பிடத்தகுந்த படம்.

இந்நிலையில் வேதாளம் படம் கன்னடத்தில் ரீமேக் ஆகிறது. புனித் ராஜ்குமார் நடிப்பது உறுதியாகி விட்டது. இப்படத்தை இயக்க நந்த கிஷோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏ.எம்.ரத்னம் கன்னட படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.
மேலும் வாசிக்க…

Vedalam Teaser Today

7:13 AM |
Just a week ago, the title and first look of Vedalam starring Ajith was released.

Reports say that the teaser of Vedalam is expected to be out tonight.

Directed by Siruthai Siva, the movie stars Ajith, Shruthi Haasan, Lakshmi Menon among others. Music is by Anirudh.

Ajith fans are eagerly awaiting the teaser launch and geared up to trend the same in twitter. The movie is expected for release on Deepavali day.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com