சிம்பு உட்பட டி.ராஜேந்தரின் குடும்பமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். சிம்பு,
குறளரசன், இலக்கியா ஆகியோருக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மதம் மாறிவிட்டார்களாம். இதனால்தான் டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவில் கூட சிலுவைக் குறியீடு இடம்பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவிற்கு திருமணம் நடைபெற்றது நினைவிருக்கலாம். இந்த திருமணத்தின் போதுதான் டி.ஆர். குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது அம்பலத்துக்கு வந்துவிட்டது. முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இலக்கியாவின் திருமணம் நடந்தது.
டி.ராஜேந்தர் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி சில வருடங்களாகிவிட்டதாம். இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது.
அதுமட்டுமின்றி நயன்தாராவை திருமணம் செய்ய நினைத்த சிம்பு கிறிஸ்துவராக மதம் மாறினார். பின்னர் கருத்த வேறுபாட்டில் இருவரும் பிரிந்தது அனைவருக்கும் தெரியும்.பின்னர் தொடர்ந்து பல படங்களில் கவனம் செலுத்திய சிம்பு.
பீப் பாடலின் பிரச்சனையால் மீண்டும் கிறிஸ்தவத்தில் மும்முரமானார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி சிம்புவுக்காக சிறப்பு பிராத்தனைகளும் நடத்தப்படுகிறதாம்.
Tags:
Cinema
,
கிறிஸ்தவராக மதம் மாறிய சிம்பு
,
சிம்பு
,
சினிமா