கோவையில் படுத்துக் கொண்டே படம் பார்க்கும் மல்டிபிள் தியேட்டர் காம்ப்ளக்ஸ் அமையவுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் புரோசான் மாலில் இந்த 9 ஸ்கிரீன்களுடன் இந்த காம்பளக்ஸ் கட்டப்படவுள்ளது.
கோவையில் ஏற்கனவே புரூக்பீல்ட்ஸ், அவினாசி ரோட்டில் உள்ள ஃபன் ரீபப்ளிக் என இரண்டு மால்கள் உள்ளன. இந்த மால்களில் 5,6 திரையரங்கங்கள் உள்ளன. தற்போது கோவை சத்தி சாலையில் புரோசான் மால் மிக விரைவாக கட்டப்பட்டு வருகிறது. கோவை பேருந்து நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மால் அமையவுள்ளது.
இந்த மாலில்தான் தற்போது 9 திரையரங்கங்களுடன் ஐநாக்ஸ் நிறுவனம் சார்பில் மல்டிபிள் தியேட்டர் காம்ப்ளக்ஸ் அமையவுள்ளது. ரசிகர்களை கவரும் வகையில் அற்புதமான உட்புற அலங்காரத்துடன் இந்த மல்டிபிள் காம்ப்ளக்ஸ் தியேட்டர் அமையவுள்ளன. அந்த வகையில் தமிழகத்திலேயே மிகப் பெரிய மல்டிபிள் தியேட்டர் காம்ப்ளக்ஸ் என்ற பெருமையை புரோசான் மால் பெறவுள்ளது.
Tags:
News
,
கோவையில் அமைகிறது படுத்துக் கொண்டே படம் பார்க்கும் தியேட்டர்