அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு தயாரித்து வருகிறார்.
விஜய்க்கு மனைவியாக சமந்தாவும், தோழியாக ஏமி ஜாக்சனும் நடித்திருக்கிறார்கள். விஜய் மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருக்கிறார். வில்லனாக மகேந்திரன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படம் குறித்து சமந்தா சமீபத்தில் பேசிய இவர் ‘இதில் வெறும் டான்ஸ் மற்றும் பாடல்களுக்கு மட்டும் என் கதாபாத்திரம் இல்லை. படத்தில் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரம், இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் மிகவும் வலுவானது’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்த சமந்தா