பீப் பாடல் சர்ச்சைக்கு முன்பாக வெள்ள பாதிப்பின்போது ‘நிம் கேர்’ என்ற தொண்டு நிறுவனம் மூலமாக சுமார் 40 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார் சிம்பு. தொண்டு நிறுவனங்கள் மூலமாக உதவி செய்தால் மட்டுமே நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று அடையும் என்பதால் இப்படி செய்தாராம்.
நிவாரணப் பொருட்களை பேக் செய்யத் தனது வீட்டையும் கொடுத்து உதவியது மட்டுமல்லாமல் குழுவினருடன் அவரும் தொடர்ந்து 48 மணிநேரம் பேக் செய்வதில் சளைக்காமல் வேலை செய்தாராம்.
நிவராணப் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடித்த அந்த தொண்டு நிறுவனத்தின் தன்னார்வலர்களைப் பாராட்டி சிம்பு அவர்களை அழைத்து விருந்து கொடுத்து கவுரவம் செய்திருக்கிறார்.
Tags:
Cinema
,
சிம்பு
,
சிம்புவை பற்றி வெளிவந்த மற்றொரு உண்மை
,
சினிமா