பீப் பாடல் விவகாரத்தில் பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார் சிம்பு. அவர் மட்டுமின்றி அவர் குடும்பமும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பது அவர்களுடைய பேச்சில் இருந்து தெரிகிறது.
அவருடைய தனிப்பட்ட சிக்கல் அவர் படத்துக்கும் வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் இதுநம்மஆளு படம் பிப்ரவரியில் வெளியிடுவதாக இருந்தது.
அந்தப்படத்தின் வெளியிடும் உரிமையை தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம் வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்தன. ஒன்றுக்குப் பலமுறை பேசிக்கொண்டிருந்தார்கள். இதனால் அந்தப்படத்தை அவர்கள்தான் வெளியிடவிருக்கிறார்கள் என்று செய்திகளும் வந்துவிட்டன. இந்நிலையில் இந்தச்சிக்கல் வந்துவிட்டதால் தேனாண்டாள்நிறுவனத்தினர் இந்தப்படத்தை வாங்கி வெளியிடும் முயற்சியில் இருந்து பின்வாங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே தேனாண்டாள் உட்பட வேறு சில நிறுவனங்களிலும் சிம்பு தரப்பிலிருந்து பேசிவருவதாகச் சொல்லப்பட்டது. இப்போது தேனாண்டாள்நிறுவனம் இல்லை என்று முடிவாகிவிட்டதால் வேறு நிறுவனங்களிடம் பேசுகிறார்களாம்.
எப்படியும் பிப்ரவரியில் படத்தை வெளியிட்டுவிடுவது என்று உறுதியாக இருப்பதாகவும் யாரும் வெளியிட முன்வராவிட்டால் சொந்தமாகவே படத்தை வெளியிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது
Tags:
Cinema
,
சிம்பு
,
சினிமா
,
பீப் பாடலால் இதுநம்மஆளு படத்திலும் மாற்றம்