விஜய்
இந்த ஆண்டில் விஜய் நடித்து வெளிவந்த படம் புலி மட்டுமே…
விஜய் அப்பா மகனாக இரட்டை வேடத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் மிரட்டி வெளிவந்த படம் புலி! புலி படம் மொத்தமும் சில, பல ஆண்டுகளுக்கு முந்தைய., மன்னர்கலத்தில் நடக்கும் கதை களத்தை கொண்டு வெளி வந்திருந்தது.
ஆனால் அந்த மிரட்டல் கொஞ்சமே கொஞ்சம் ஓவர் டோசாகி குழந்தை ரசிகர்களை மட்டும் பெருவாரியாக திருப்தி படுத்தும் விதத்தில் அமைந்தது.
இந்த வருடம் விஜய்க்கு மட்டுமில்லாமல் விஜய் ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே அமைந்தது.
2016 தெறி-க்கு எதிா்பாா்ப்புகள் அதிகாிக்கின்றது
அஜித்
இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே தன் ரசிகர்களை “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் சந்தோஷப்படுத்தியவர் அஜித். என்னை அறிந்தால், அஜித் ரசிகரகளை மட்டும்மல்லாமல் அனைவரையும் கவர்ந்தது.
கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த “என்னை அறிந்தால்” படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா நடித்திருந்தனர். இதில் வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து அஜித் நடித்து வெளிவந்த படம் வேதாளம். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹசனும் தங்கையாக லட்சுமிமேணனும் நடித்து இருந்தனர். வேதாளம் படம் வெளிவந்து திரை அரங்கில் இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஆகா இந்த வருடத்தில் அஜித்தின் என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய படங்கள் வசூலிலும், ரசிகர்களையும் திருப்திபடுத்தியது என்றே சொல்ல வேண்டும்.
2016 ஆம் ஆண்டு இளைய தளபதிக்கு நல்ல ஆண்டாக அமைய
Thediko வாழ்த்துகிறது.
Tags:
2015ல் வென்றது யார்
,
Cinema
,
அஜித்
,
சினிமா
,
தெறி
,
விஜய்
,
வேதாளம்