டார்லிங் படத்தில் நடித்தவர் நிக்கி கல்ராணி. தமிழில் முதல் படமே ஹிட்டாகி விட்டதால் தற்போது அவர் கைவசம் மொட்ட சிவா கெட்ட சிவா, கோ-2, எழில் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் படம் உள்பட நான்கு படங்கள் உள்ளன.
இப்படி தமிழில் ஒரே நேரத்தில் பல படங்கள் கமிட்டாகி விட்டதால் மலையாளம், தெலுங்கு படங்களை குறைத்து விட்டு முழுநேர தமிழ் நடிகையாகி விட்டார் நிக்கி.இந்த நிலையில், எழில் இயக்கும் படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நிக்கி கல்ராணி. அதனால் அவருக்கு ஒரு பைட் சீனும் உள்ளதாம்.
சமீபத்தில் அந்த சண்டை காட்சியை ஒரு செட்டில் மூன்று நாட்களாக படமாக்கினர். அப்போது ஒரு ஸ்டன்ட் நடிகர் நிக்கியை தாக்கியபோது இவரது கையில் பலமாக பட்டு விட்டதாம். விளைவு, நிக்கியில் கை நடு விரலில் பலத்த அடிபட்டு வலியால் துடித்தாராம். இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்து விட்டு அவரை மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இதன்காரணமாக, தற்போது ஓய்வெடுத்து வருகிறார் நிக்கி கல்ராணி.இந்த எதிர்பாராத விபத்து காரணமாக ராகவா லாரன்சுடன் நிக்கி கல்ராணி நடித்து வரும் மொட்ட சிவா கெட்ட சிவா படப்பிடிப்பு கூட ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம். கையில் போடப்பட்டுள்ள கட்டை அவிழ்த்ததும், லாரன்ஸ்-நிக்கி நடிக்கும் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
Tags:
Cinema
,
சினிமா
,
டார்லிங்
,
நிக்கி கல்ராணியின் கை எலும்பு முறிந்தது