அஞ்சான், கத்திக்குப்பிறகு பத்து எண்றதுக்குள்ள படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தார் சமந்தா. அதில் ஜாதி வெறி பிடித்த வில்லியாக அவர் நடித்த வேடத்திற்கு நிறைய கேலி கிண்டல்கள் வந்தது. என்றாலும், நெகடீவ் ரோலில் முதன்முறையாக நடித்தேன்.
அதில் என்னால் முடிந்தவரை பர்பாமென்ஸ் கொடுத்தேன். அதனால் விமர்சனங்கள் பற்றி கவலைப்படவில்லை என்று கண்டுகொள்ளாமல் விட்டு விட்டார் சமந்தா. அதேசமயம், மீண்டும் தனது நடிப்புக்கு அதுபோன்ற விமர்சனங்கள் வந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாகி விட்டார்.
அதனால், தங்கமகன் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சரியாக கொடுத்திருந்த சமந்தா, இப்போது விஜய்யுடன் நடித்துள்ள தெறி படத்தில் இன்னும் மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம். சில சின்னச்சின்ன அசைவுகளில் சமந்தா கொடுத்த ரியாக்சனைப்பார்த்து சூப்பர் என்று விஜய்யே பாராட்டினாராம்.
அதனால் உற்சாகமடைந்த சமந்தா, தெறி படத்தின் சில காட்சிகளில் பொறி பறக்கும் அளவுக்கு பரபரவென்று நடித்திருக்கிறாராம். அதையடுத்து எனது நடிப்பு குறித்து எழுந்த நெகடீவ் விமர்சனங்கள் இனிமேல் இருக்காது என்றும் தனது அபிமானிகளிடம் கூறி வருகிறார் சமந்தா.
Tags:
Cinema
,
அஞ்சான்
,
கத்தி
,
சமந்தாவை தட்டிக்கொடுத்த விஜய்
,
சினிமா