காஞ்சனா-2வைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வரும் படம், மொட்ட சிவா கெட்ட சிவா. இந்த படத்தை ஜீவா நடித்த சிங்கம் புலி படத்தை இயக்கிய சாய் ரமணி இயக்கி வருகிறார். தெலுங்கில் வெளியான பட்டாஸ் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் இரண்டு கெட்டப்பில் நடிக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் செட் போட்டு படமாக்கப்பட்டது. பின்னர் சென்னையை அடுத்துள்ள விஜிபி அருகில் ஒரு வாரமாக படப்பிடிப்பு நடத்தியவர்கள் இப்போது ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களில் இருந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
ஜனவரி 20ந்தேதி வரை அங்குதான் படப்பிடிப்பு நடக்கிறதாம்.மேலும், சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து ஐதராபாத்திற்கு சென்றதற்கு முக்கிய காரணமே, தெலுங்கு பட்டாஸ் படத்தின் ரீமேக்கான இந்த படத்தில் வில்லன் தொடங்கி பல முக்கிய கேரக்டர் நடிகர் நடிகையர் பட்டாஸ் படத்தில் நடித்தவர்கள்தான் நடிக்கிறார்களாம்.
அதோடு அவர்கள் தெலுங்கு படங்களில் பிசியாக நடிப்பவர்களாம். அதனால் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து இங்கு அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்துவதோடு, ஆந்திராவிலேயே படப்பிடிப்பு நடத்தினால் இன்னும் எளிதாக இருக்கும் என்பதினால்தான் யூனிட்டை சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு மாற்றியுள்ளார்களாம். அங்குதான் ராகவா லாரன்ஸ் வில்லனுடன் மோதும் அதிரடியான சண்டை காட்சியும் படமாக்கப்பட உள்ளதாம்.
Tags:
Cinema
,
ஐதராபாத்தில் முகாமிட்ட ராகவா லாரன்ஸ்
,
காஞ்சனா-2
,
சினிமா
,
ராகவா லாரன்ஸ்