சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான தேர்தல், சென்னை விருகம்பாக்கம் ஏ.கே.ஆர்.மஹாலில் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன.
வசந்தம் அணி சார்பில் தலைவர் பதவிக்கு சிவன் சீனிவாசன், துணைத் தலைவர் பதவிகளுக்கு கமலேஷ், வி.சோனியா, செயலாளர் பதவிக்கு போஸ் வெங்கட், இணைச் செயலாளர் பதவிக்கு பரத், கவிதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
புதிய அலைகள் அணி சார்பில் தலைவராக பானு பிரகாஷ், துணைத் தலைவர்களாக மனோபாலா, சுந்தர், பொதுச் செயலாளராக பாபுஸ், பொருளாளராக விஜய் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
உழைக்கும் கரங்கள் அணி சார்பில் தலைவராக ரவி வர்மா, பொதுச் செயலாளராக எஸ்.கனகப்பிரியா, பொருளாளராக ஜெயந்த், துணைத் தலைவர்களாக லஷ்மி பிரசன்னா, வின்சன்ட் ராய் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில், 23 பதவிகளுக்கு மொத்தம் 69 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில், சின்னத்திரை நடிகர் சங்கத்தை சேர்ந்த 1,341 உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.
அன்று மாலையே வாக்குகள் எ்ண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுமாம்.
Tags:
Cinema
,
சினிமா
,
சின்னத்திரை நடிகர்கள் சங்க தேர்தல்