தண்ணீரில் சென்னை, கண்ணீரில் மக்கள், களப்பணியில் கலைஞர்கள். கனடா பறந்தார் அனிருத். அனைவருக்கும் அதிர்ச்சி.
இசைஅமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது இசைக்குழு கனடா டொரொண்ட்டோவில் நடைபெறவிருக்கும் "அனிருத் லைவ் கான்செர்ட்" இசை நிகழ்ச்சிக்காக நேற்று கனடா புறப்பட்டுள்ளனர். இந்நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நாள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் என்பதும் அனிருத் ரஜினியின் உறவினர் என்பதும் நாம் அறிந்ததே.
சென்னையில் விமான போக்குவரத்து சீராக இல்லாத காரணத்தால் நேற்று பஸ்சில் பெங்களூர் சென்று, அங்கிருந்து விமானமுலம் மும்பை, லண்டன் ஊடாக கனடாவை இன்று சென்றடைகின்றார்கள்.
சென்னையில் பெய்த பலத்த மழையால் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள்.இவர்களுக்கு உதவ பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் எல்லாம் நேரடியாக சென்று உணவு, உடை உள்ளிட்ட பொருட்களை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் இளையராஜாவும் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று அங்கு 1 லட்சம் போர்வைகள் மற்றும் உணவுப் பொட்டலங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியிருக்கிறார். அத்துடன் வெள்ளம் பாதித்த சிறுமலர் பள்ளியில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு தானே படகில் சென்று உணவு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இளையராஜா வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
சினிமா கலைஞர்களும் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தமிழ் அல்லாத மற்ற மாநில கலைஞர்களும் கோடி கோடியாக சென்னைக்கு நிவாரணங்களை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். சிறிய, பெரிய கலைஞர்கள் என்றில்லாமல் எல்லோரும் தமது சக்திக்கு மேலாக பல்வேறு வழிகளில் அம்மக்களோடு மக்களாக நின்று நம்பிக்கையை ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படி மக்கள், சினிமா கலைஞர்கள் மற்றும் இசையானி போன்ற மூத்த இசையமைப்பாளர் எல்லோருமே தண்ணிரில் இறங்கி களப்பணி ஆற்றும் போது, வளர்ந்து வரும் அனிருத் இதுவரை எவ்வித உதவியும் வழங்காமல், அம்மக்களோடும் கூட நிற்காமல், மீடியாக்களுக்கும் அறிவிக்காமல் பஸ் ஏறி பெங்களூர் சென்று, விமானமேறி கனடாவில் இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருப்பது எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வளர்ந்து வரும் ஒரு பிரபல இசையமைப்பாளரின் இச்செயல் அவரது பக்குவமின்மையின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது, தவிர கோபப்பட எதுவுமில்லை.சென்னை இது எங்க ஏரியா என்று பாட்டு பாடினால் மட்டும் போதுமா? உங்க மக்களுக்கு நீங்களே உதவி செய்யாட்டி எப்படி?
இருப்பினும் இந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான டாலர் வருமானம் பாதிக்கப்பட்ட ரசிகர்களையும் மக்களையும் சென்றடைந்தால் அதுவும் ஒரு உதவியே.
காலத்தால் செய்த உதவி சிறிதெனினும் அது ஞாலத்தால் மானப் பெரிது.
செய்வீர்களா அனிருத் சார்?
Tags:
Cinema
,
அனிருத் சென்னையை (கை) விட்டு வெளிநாடு பறந்தார்
,
சினிமா