விஜய் நடித்து வரும் விஜய்59 படத்தை இயக்குனர் அட்லீ வேகமாக முடித்து வருகிறார். கிரைம் கலந்த ஆக்க்ஷன், திரில்லர் படமாக இது உருவாகிறது.
விஜய் போலீஸ் அதிகாரியாக வேடம் ஏற்றுள்ள இந்த படத்துக்கு 'காக்கி' , 'சந்திரியன்', 'வெற்றி' என்று பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
தீபாவளி தினத்தில் விஜய்59 படத்தின் பஸ்ட்லுக், டீசர் ஆகியவை வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் இப்படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறாள். இதை இயக்குனர் அட்லியே உறுதி செய்துள்ளார்.
Tags:
சினிமா
,
விஜய்
,
விஜய் படத்தில் மீனா மகள் நைனிகா அறிமுகமாகிறாள்