2015 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் அஜித்தா..? விஜய்யா ..? என்ற கணக்கெடுப்பு நியூஸ்டிக் செய்திதளத்தின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று தொடங்கப்பட்டது.
கணக்கெடுப்பு தொடங்கிய ஐந்து மணிநேரத்திற்குள் அஜித் ரசிகர்கள் வாக்குகளை அள்ளிவீச அபார வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் முன்னிலையில் இருந்தார்.
பின் விஜய் ரசிகர்களின் வெறித்தனமான வாக்குகளால் மின்னல் வேகத்தில் மெல்ல மெல்ல விஜய்க்கான வாக்கு உயர்ந்தது.
இறுதியாக கணக்கெடுப்பின் முடிவில் அஜித் 38% வாக்குகளையும், விஜய் 62% வாக்குகளையும் பெற்று ட்விட்டரில் 2015 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் விஜய் தான் என நிரூபித்துள்ளனர்.
மேலும் இதே கணக்கெடுப்பிற்காக நியூஸ்டிக்கின் பேஸ்புக் தளத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்பின் முடிவு இந்த வார இறுதியில் வெளியிடப்படும்.
Tags:
Cinema
,
அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்
,
அஜித்
,
அஜித்தா? விஜய்யா?
,
சினிமா
,
விஜய்