நடிகர் விஜய் அறிவுரைப்படி, அவரது ரசிகர்கள் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.
சேத்துப்பட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய சென்னை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் பூக்கடை குமார் தலைமையில் உணவு, சேலை மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மகளிர் அணி நிர்வாகிகள் ஆண்டாள், லட்சுமி நாயகம், சின்னக்குழந்தை, ரேணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சீபுரம், தாம்பரம், நீலாங்கரை பகுதியில் காஞ்சீபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி தலைவர் இ.சி.ஆர். சரவணன் தலைமையில் உணவு, வேட்டி, சேலை மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் நிர்வாகிகள் ஸ்ரீவீன், தினேஷ், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய்
,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நிவாரண உதவி