அஜித் படங்களின் பட்டியலை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தீர்கள் என்றால் விஜய் அளவுக்கு ரீமேக் படங்களில் நடிக்கவில்லை அல்லது ஆர்வம் காட்டியிருக்கவில்லை என்பது நன்றாக தெரியும்.. கண்ணுக்கு தெரிந்து அவர் நடித்த ரீமேக் படம் என்றால் மலையாளத்தில் மோகன்லால் நடித்த கிரீடம் ஒன்றுதான். அப்படி ரீமேக்கே வேண்டாம் என ஒதுங்கியிருந்தவரை தேடி, என்னை ரீமேக் செய்து ஒரு ஹிட் எடுத்துக்கோ என ஒரு படம் தேடி வந்துள்ளது. மலையாள மெகாஸ்டார் மம்முட்டி நடித்து இந்த வருடம் வெளியான பிளாக் பஸ்டர் படமான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படம் தான் அது.
இந்தப்படம் வெளியானபோதும் கூட வழக்கம்போல ரீமேக் வியாபாரம் சூடுபிடித்தது. இந்தியில் அக்சய் குமாரும், தெலுங்கி வெங்கடேஷும் ரீமேக் ரைட்ஸ் கேட்டு அப்ளிகேசன் போட்டுவிட்டு, சித்திக்கையே டைரக்ட் செய்யவும் அழைப்பு விடுத்தார்கள்.. ஆனால் முதலில் தமிழ் ரீமேக்கை இயக்கும் முடிவில் உறுதியாக இருந்தார் சித்திக்.. அப்படியானால் தமிழில் கதாநாயகன் யார் என்றால் அந்த விஷயத்திலும் சித்திக் தெளிவாக இருந்தார். இந்தக்கதையில் ரஜினி அல்லது அஜித் நடித்தால் மட்டுமே சரியானதாக இருக்கும் என்று சில மாதங்களுக்கு முன்பே கூறியிருந்தார் சித்திக்.
ரஜினி ‘கபாலி’யில் பிஸியாகிவிட்டார். தவிர அது முடிந்ததும் ‘எந்திரன்-2′ தயாராக நிற்கிறது. அதனால் இருக்கும் ஒரே சாய்ஸ் அஜித் மட்டும் தான். ஆனால் நீண்ட நாட்கள் இதுபற்றி இரு தரப்பிலும் முடிவெடுக்காமல் இருந்த நிலையில் தற்போது இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அஜித் ஒப்புதல் தந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. மலையாளத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவே இதிலும் நாயகியாக நடிப்பது உறுதி என்றும் சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சித்திக் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Tags:
'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்
,
அஜித்
,
கபாலி
,
சினிமா
,
ரஜினி