தமிழ் சினிமாவின் வசூல் மன்னர்களாக வலம் வரும் விஜய், அஜித் இவர்களின் படத்தை தான் விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு கொண்டு வாங்குவார்கள். அஜித்தின் வேதாளம் படம் தற்போது தமிழ் சினிமா காணாத வசூல் சாதனையை படைத்தது வருகின்றது.
இந்நிலையில், திருப்பூரை சார்ந்த விநியோகஸ்தர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று தான் தற்போது வாட்ஸ் அப்பில் சக்கை போடு போடுகின்றது.
இதில் அவர் கூறுகையில், ‘தயவு செய்து நடிகர்களின் படங்களை ரூ 100 கோடி, ரூ 200 கோடி என்று தான் எந்த விநியோகஸ்தர்களும் சொல்லாதீர்கள். உங்கள் திரையரங்கம் நல்ல கலேக்ஷன் பார்த்தால் அதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். அதை வெளியில் கூறி அந்த நடிகர்களின் சம்பளத்தை உயர்த்தாதீர்கள். ரூ 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் எல்லாம் தற்போது ரூ 25 கோடி வாங்குகிறார்’ என பேசியுள்ளார்.
இதில் அவர் குறிப்பிட்டு இருந்தது புலி மற்றும் வேதாளம் படத்தின் வசூல் நிலவரங்களை தான் என்ற தகவலுக்கும் பரவிவருகின்றது.
Tags:
Cinema
,
அஜித்
,
ஆப்பு வைத்த விநியோகஸ்தர்
,
சினிமா
,
விஜய்