இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும் நிலையில் அந்த படத்தை குறித்து அவ்வப்போது ஆச்சரியமான செய்திகள் வெளிவந்து கொண்டே உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹாலிவுட்டையே மிஞ்சும் அளவுக்கு தண்ணீருக்கு அடியில் ஒரு ஆக்சன் காட்சியில் விஜய் நடித்ததாக செய்திகள்வெளிவந்த நிலையில் தற்போது விஜய் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து டூப் இன்றி குதித்து சாகசம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன. டூப் இன்றி விஜய்100 அடி உயரத்தில் துணிச்சலுடன் குதித்ததை படக்குழுவினர் ஆச்சரியமாக பேசி வருகின்றனர்.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார்,இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படம் இவருக்கு50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
Tags:
Atlee
,
Cinema
,
Theri
,
Theri Movie News
,
Vijay