2015 தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் கொஞ்சம் நஞ்சமல்ல, பல 100 பேருக்கு மேல் உயிரிழந்து பல ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக மக்களால் பங்களா வீட்டில் வாழும் தமிழ் நடிகர்கள் பலர் இன்றும் பீச் ஹவுஸ்சில் குடியும் குடுத்தனமுமாக ஹாயாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்களின் ரசிகர்கள் சார்பில் ஆங்காங்கே நற்பணிகள் நடந்து வருகிறது. இதெல்லாம் சம்பந்தப்பட்ட நடிகர்களின் அறிவுரையின் பேரில் நடக்கிறதா என்றால் அதுதான் இல்லை. நற்பணிகளுக்கும் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கும் சம்பந்தமே இருக்கமாட்டேங்குது.
கடந்த சில தினங்களாகத்தான் தமிழ் நடிகர்கள் சிலர் அவர்களால் ஆன பண உதவியை அரசுக்கு நன்கொடையாக கொடுத்து வருகிறார்கள். நடிகர் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, கார்த்தி, விஷால் போன்ற நடிகர்கள் அவர்களால் முடிந்த பணத்தை கொடுத்துள்ளார்கள். ஆனால் தமிழ் சினிமாவின் பெரிய ஹிரோக்களின் லிஸ்டில் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இதுவரை ஒரு பைசா கூட கொடுக்க முன் வரவில்லை. எப்படியும் இந்த செய்தியை படிச்சிட்டு ரஜினி அந்த நாட்டுல இருக்காரு, விஜய் இந்தியாவிலேயே இல்லை, அஜித்துக்கு உடம்பு சரியில்லைன்னு கமெண்ட் அடிக்கும் புண்ணியவான்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. உதவி எங்க இருந்தாலும் செய்யலாம்னு...
ரசிகர்கள் மற்றும் மக்கள் மூலம் பணம் மட்டும் வாங்கி பெட்டி பெட்டியாக வீட்டில் அடுக்கி வைத்துவிட்டு இப்படி உதவ மனமில்லாத நடிகர்களுக்கு பால் அபிஷேகம் செய்து என்ன புண்ணியம்.
Tags:
Cinema
,
அஜித்
,
கமல்
,
கார்த்தி
,
சினிமா
,
சூர்யா
,
தனுஷ்
,
ரஜினி
,
விஜய்
,
விஷால்