‘கயல்’ படத்திற்கு பிறகு அடுத்த வெற்றிக்காக காத்திருந்தார் ஆனந்தி. அதன்பின்னர் வந்த ‘சண்டிவீரன்’ இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தாலும் படம் கமர்ஷியல் ஹிட்டாகவில்லை.
இவர் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் நேற்று வெளியானது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்நிலையில் இயக்குனர் மீது ஆனந்தி பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது….
“இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்னிடத்தில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படக்கதையை சொன்னார். என் கேரக்டர் நன்றாக இருந்ததால் ஒப்புக் கொண்டேன். படத்தில் இருக்கும் இன்னொரு ஹீரோயின் செகண்ட்தான் என்றார். ஆனால் படப்பிடிப்பிலும் விளம்பரத்திலும் செகண்ட் ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார்.
என்னுடைய காட்சிகள், வசனங்களை நிறைய மாற்றிவிட்டார். எனக்கு நிறைய டபுள் மீனிங் டயலாக்குகளை கொடுத்து பேசச் சொன்னார். இது குறித்து கேட்டப்போது என்னை திட்டினார். கயல், சண்டிவீரன் படங்களில் எனக்கு ஏற்பட்ட இமேஜ்ஜை கெடுத்துவிட்டார்” என்றார் ஆனந்தி.
Tags:
Cinema
,
ஆனந்தி புகார்
,
சினிமா